கம்பராமாயணம் 4862 · சுந்தர 2.74

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்துச் செறி வேர் சிதைப்பத்
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தாழாக்
கந்தார வீணைக்களி செஞ்செவி தாழ்ந்து நுங்க.

பொருள் · Meaning in Tamil

மந்தாரம் உந்து - மந்தாரமரங்கள் நிரம்பிய சோலையானது வெளிப்படுத்தின; மகரந்தம் மணந்த வாடை - மலர்த்தாதுகள் மணக்கின்ற வாடைக்காற்று; செந்தாமரை வாள்முகத்து - செந்தாமரை போன்ற ஒளிமிக்க முகத்தில்; செறிவேர் சிதைப்ப - மிகுந்துள்ள வேர்வையைப் போக்க; விஞ்சையர் - வித்தியாதரர்; தம்தாம் உலகத்திடை - தங்கள் தங்கள் உலகத்தில் இருந்து கொண்டு; பாணி தள்ளும் - தாளம் பிறழாத; கந்தார வீணை - கந்தாரப் பண்பாடும் பொருட்டு நரம்பு திருத்தப் பெற்ற வீணையிலிருந்து புறப்பட்ட; களி - இசையாகிய தேனை; செஞ்செவி காது நுங்க - சிறப்புற்ற செவியின் துளைகள் அனுபவிக்க.

அனுமனின் முகவியர்வையை மந்தாரச் சோலைக் காற்று போக்கிற்று. அவனுடைய திருச்செவிகள் விஞ்சையரின் பண்ணை அனுபவித்தன. மந்தாரம் - தேவலோகத்துத் தெய்வ மரங்களில் ஒன்று. கந்தாரம் - சுரபேதம் என்று பழைய உரை பேசும். (அடை - பதி). காது - துளை. காதற்ற ஊசியும் (பட்டினத்தார் பாடல்) கந்தாரம் - பண் - கந்தாரம் செய்து களிவண்டு முரன்றுபாட (சிந்தாமணி 1959)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The breeze, fragrant with pollen blown from the mantāra trees,
  2. dried the thick sweat on his face, bright as a red lotus,
  3. while the honeyed music of the kantāra-tuned vīṇās that the Vidyādharas played, keeping time,
  4. each in their own world, flowed into the hollows of his fine ears.

What the poem says

The celebration continues. A breeze scented with the pollen of the mantāra, a tree of the gods' paradise, cools the sweat on Aṉumaṉ's lotus face. From their own worlds the Vidyādharas play lutes tuned to the kantāram melody, and the music pours into his ears like honey.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mantāram untu makarantam maṇanta vāṭai
centāmarai vāḷ mukattuc ceṟi vēr citaippat
tamtām ulakattiṭai viñcaiyar pāṇi taḷḷum
kantāra vīṇaikkaḷi ceñcevik kātu nuṅka.