கம்பராமாயணம் 4863 · சுந்தர 2.75
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெரிது ஆலாலம்அன்னாள் - பெரிய ஆலகால விடத்தைப் போன்ற; அங்கார தாரை - அங்கார தாரை என்பவள்; அப்பொங்கு புனல் ஆர்கலி - அந்த பொங்குகின்ற புனலைப் பெற்றுள்ள கடல்; வேறேயும் ஒன்று - தன்னினும் வேறுபட்ட ஒரு; வெங்கார் நிறப் புணரி - வெப்பமான கரிய நிறம்பெற்ற கடலை; தர - பெற்றெடுத்து; பொலிவதே போல் - விளங்குவதையே ஒப்ப (தோன்றி); எனை - என்னை; இங்கு ஆர் கடத்திர் - இங்கேதாண்டிப் போகின்றீர்; என்னா - என்று கூறி; எழுந்தாள் - வளர்ந்தாள். கடல் மற்றொரு கடலை ஈன்றதுபோல் அங்கார தாரை கடலில் தோன்றினாள். அவள் என்னை எவர் கடக்கப் போவது என்று கூறினாள். அங்கார தாரை - நெருப்புக் கொழுந்து போன்றவள். ஒன்று புணரியை - எனக்கூட்டி யுரைக்கப் பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if that swelling, roaring ocean had brought forth
- another ocean, fierce and black, and shone with it,
- Aṅkāratārai, like the great ālālam poison, rose up,
- crying, “Who among you here will get past me?”
What the poem says
A third obstacle appears: Aṅkāratārai, a demoness of the sea whose name means "stream of burning coals", deadly as the poison that rose at the churning of the ocean. Huge and black, she looks as if the sea had given birth to a second, darker sea. She rises up and challenges anyone to try to get past her.