கம்பராமாயணம் 4864 · சுந்தர 2.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கணத்து இறுதி - ஒருகணத்தின் முடிவுக்குள்; காதம் - காத தூரத்திலுள்ள பொருளை; கடுங்குறி கண்ணாள் - வேகமாக அறியும் கண்களையுடைய அங்கார தாரை; பாதச் சிலம்பின் ஒலி - பாதத்தின் சிலம்பின் ஒலியாலே; வேலையொலி பம்ப - கடல் அலையின் ஒலி அடங்க; நெடுமேல் நாள் - நீண்ட காலத்துக்கு முன்; வேதக் கொழுஞ்சுடரை - வேதங்கள் உணர்த்தும் ஒளிமயமான திருமாலை; நாடி - போர்செய்ய விரும்பி; ஓதத்தின் ஓடும் - கடலிலே ஓடி வருகின்ற; மது கைடவரை - மதுவையும் கைடவனையும், ஒத்தாள் - ஒத்திருந்தாள்.
அங்காரதாரை - நீண்ட தூரத்தில் உள்ள பொருள்களைக் காணும் கண்களைப் பெற்றவள். அவள் திருமாலுடன் போர் செய்ய வந்த மது கைடவர்களைப் போன்றிருந்தாள். கடும்குறி - வேகமாக அறியும். கலுழன்தன் கடுமையிற் கரந்தான் (6237) (வேலை - அலை பம்பு - அடங்கி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- She whose eyes in the space of an instant fiercely mark out a thing a league away,
- the sound of whose anklets drowned the roar of the sea,
- was like Madhu and Kaiṭabha who long ago
- came running over the flood in search of the radiant Light of the Vedas.
What the poem says
Aṅkāratārai can spot something a league away in the blink of an eye, and her anklets jangle louder than the roaring waves. She is compared to Madhu and Kaiṭabha, the two demons who in an earlier age charged across the primal waters to fight Tirumāl, the light the Vedas proclaim.