கம்பராமாயணம் 4865 · சுந்தர 2.77

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிறைத் துண்டத்துணை என - பிறைத் துண்டத்தின் இரட்டை என்று சொல்லும்படி; சுடர் எயிற்றாள் - விளங்குகின்ற கோரைப் பற்களை உடையவள்; கண்டத் திடைக் கறையுடைக் கடவுள் - கழுத்தின்கண் விடத்தால் உண்டாகிய நீலநிறம் பொருந்திய சிவபிரான்; கைம்மா - யானையினது; முண்டத்து உரித்த உரியால் - உடம்பிலிருந்து உரித்த தோலாலே; முளரி வந்தான் அண்டத்தினுக்கு - பிரமதேவனால் ஆகிய அண்டத்துக்கு; உறை அமைத்து அனைய - உறை தைத்துப் போட்டால் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அத்தகைய; வாயாள் - வாயினை உடையவள்.

தலையற்ற உடலை முண்டம் என்றும், உடலற்ற தலையைக் குண்டம் என்றும் கூறும் வழக்குண்டு. முனிவர்கள் ஏவிய யானையைச் சிவபிரான் உரித்துப் போர்த்துக் கொண்ட செய்தி புராணங்களில் காண்க. இது கஜ சம்ஹாரமூர்த்தம் - கோயில்களில் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her gleaming fangs were like a pair of crescent-moon slivers;
  2. her mouth was like a cover made for the cosmos of the Lotus-born
  3. from the hide that the God with the dark stain on his throat
  4. flayed from the elephant's trunkless body.

What the poem says

A grotesque portrait of Aṅkāratārai: her curved fangs are like twin crescent moons, and her mouth is as big as a sack sewn to hold the whole universe of Piramaṉ, made from the elephant hide Civaṉ tore off and wore. That refers to the Purāṇic story of Civaṉ flaying an elephant that sages had sent against him, a scene shown in temple sculpture.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṇṭap piṟaittuṇai eṉac cuṭar eyiṟṟāḷ;
kaṇṭat tiṭaik kaṟai yuṭaik kaṭavuḷ kaimmā
muṇṭattu uritta uriyāl muḷari vantāṉ
aṇṭattiṉukku uṟai amaittaṉaiya vāyāḷ!