கம்பராமாயணம் 4866 · சுந்தர 2.78

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிமிர்ந்துஅலைநெடுங் கடலின் நீர் - பெருகி அலையுடன் கூடிய கடலின் தண்ணீரானது; தன்வன்தாள் - தன்னுடைய வலிமையான பாதத்தை; அலம்ப - கழுவ; வான் முகடு முடி வௌவ - ஆகாயத்தின் உச்சியை தலை அளாவ; நின்றாள் - (அனுமனுக்கு) எதிரே நின்றாள்; ஆய் திறத்தவன் - ஆராயும் வலிமைபெற்ற அனுமன்; இவள் - இந்த அரக்கி; அறத்தை - தருமத்தை; அருளோடும் தின்றாள் ஒருத்தி - கருணையுடன் சேர்த்து உண்டாளாகிய ஒருத்தி; என்பது - என்னும் உண்மையை; அன்று தெரிந்தான் - அப்போது தெரிந்து கொண்டான். அரக்கியானவள் பேருருக்கொண்டு நின்றாள். அனுமன் இவள் அறத்தையும் அருளையும் தின்ற ஒருபெண் என்பதை அறிந்தான். அலம்புதல் - கழுவுதல். ஆழி வடிம்பு அலம்ப நின்றான் என்று நளவெண்பா பேசும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She stood there, the waters of the vast, wave-tossed sea
  2. washing her strong feet and her head seizing the dome of the sky;
  3. and then he of discerning power knew
  4. that she was one who had devoured dharma along with compassion.

What the poem says

Aṅkāratārai stands up so tall that the ocean only washes her feet while her head reaches the top of the sky. Aṉumaṉ, who sees into things, recognises her at once: unlike Curacai, who was testing him, this is a real monster who has swallowed all righteousness and mercy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟāḷ nimirntu alai neṭuṅkaṭaliṉ nīr taṉ
vaṉ tāḷ alampa muṭi vāṉ mukaṭu vauva;
aṉṟu āytiṟattavaṉ aṟattai aruḷōṭum
tiṉṟāḷ orutti ivaḷ! eṉpatu terintāṉ.