கம்பராமாயணம் 4867 · சுந்தர 2.79

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பேழ் வாய் அகத்து அலது பேர் உலகம் மூடும்
நீள் வான் அகத்தின் இடை ஏகும் நெறி காணான்
வாழ் வான் அனுக்க வளர்வாள் பில வயிற்றைப்
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான்.

பொருள் · Meaning in Tamil

பேர் உலகம் மூடும்நீள்வான் அகத்தின் இடை - பெரிய உலகை மூடுகின்ற நீண்ட ஆகாயத்தில்; பேழ்வாய் அகத்து அலது - (அரக்கியின்) பிளந்த வாயே அல்லாமல்; ஏகும் நெறி நேரா ஆழ்வான் - செல்லும் வழி கிடையாமல் துன்புற்ற; அணுக்கன் - (இராமபிரானின்) அணுக்கத் தொண்டனாகிய அனுமன்; அவள் ஆழ்பில வயிற்றைப் - அவள் ஆழமானகுகைபோன்ற வயிற்றைப்; போழ்வான் - பிளப்பதற்கு; நினைத்து - எண்ணி; இனைய வாய்மொழி - இப்படிப்பட்ட வார்த்தையை, புகன்றான் - கூறினான். வானில் கடந்துசெல்வதற்கு அரக்கியின் வாயைத் தவிர வேறு இடம் இன்மையால் துன்புற்ற அனுமன் அரக்கியின் வாயைப் பிளக்க எண்ணி இந்த வார்த்தையைக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Finding no way to pass through the vast sky that covers the great world
  2. other than through her gaping mouth, he was troubled; and the close servant,
  3. resolving to tear open her deep, cave-like belly,
  4. spoke these words.

What the poem says

Aṅkāratārai's open mouth fills the whole sky, leaving no way past except straight through her. Aṉumaṉ, Irāmaṉ's devoted servant, is frustrated, and resolves to go in and rip open her cavernous belly. First, though, he speaks to her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēḻ vāy akattu alatu pēr ulakam mūṭum
nīḷ vāṉ akattiṉ iṭai ēkum neṟi nērā
āḻvāṉ aṇukkaṉ avaḷ āḻ pila vayiṟṟaip
pōḻvāṉ niṉaittu iṉaiya vāymoḻi pukaṉṟāṉ.