கம்பராமாயணம் 4868 · சுந்தர 2.80

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சாயாவரம்தழுவினாய் - நிழலைப் பிடித்து இழுக்கும் வரத்தால் என்னை இழுத்தாய்; தழிய பின்னும் - இழுத்த பிறகும்; ஓயா உயர்ந்த விசை - தளர்ச்சி யடையாத வேகத்தை, கண்டும் - பார்த்தும்; உணர்கில்லாய் - (என் வலிமையை) அறியாமலுள்ளாய்; நெடுவான் வழி - பெரிய ஆகாயமார்க்கத்தை; வாயால் - வாயினால்; அளந்து அடைத்தாய் - அளாவித்தடுத்தாய்; நீ யாரை - நீ யார்?; இவண் நின்ற நிலைஎன்னை? - இவ்விடத்தே நிற்கின்ற நிலைமைக்குக் காரணம் யாது; என்றான் - என்று வினவினான். அரக்கியே! நிழலை இழுக்கும் வரத்தால் என்னை இழுத்தாய். யானே அதற்கு அடங்காமல் செல்கிறேன். என் ஆற்றலை உணராமல் உள்ளாய். நீ வான்வழி அடைத்து நிற்கும் காரணம் யாது என்று அனுமன் கேட்டான். சாயாவரம் - நிழல்மூலமாக ஆட்களை இழுக்கும் வரம். நிலை - தன்மை. நில்லா உலகின்நிலை (கம்ப.3289)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “You have seized me by your boon over shadows; yet even after seizing me,
  2. seeing the unflagging, soaring speed I still have, you do not understand!
  3. With your mouth you have spanned and blocked the long road of the sky!
  4. Who are you? Why do you stand here like this?” he said.

What the poem says

Aṅkāratārai has a boon that lets her catch a creature by grabbing its shadow, and she has tried to drag Aṉumaṉ down by his. He points out that he is still flying on at full speed, so she has plainly underestimated him. Then he demands to know who she is and why she is blocking the road through the sky with her mouth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cāyā varam taḻuviṉāy; taḻiya piṉṉum
ōyā uyarnta vicai kaṇṭum uṇarkillāy!
vāyāl aḷantu neṭu vāṉvaḻi aṭaittāy!
nī yārai? eṉṉai ivaṇ niṉṟa nilai? 'eṉṟāṉ.