கம்பராமாயணம் 4869 · சுந்தர 2.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன் மொழி கேட்ட அங்கார தாரை) பெண்பால் எனக்கருது பெற்றி ஒழி - (என்னை) ஒருபெண்தானே என்று நினைக்கும் தன்மையை விட்டுவிடு; உற்றால் - என் எதிரே வந்தால்; விண்பால் அவர்க்கும் - தேவ லோகத்தில் உள்ள தேவர்க்கும்; உயிர் வீடுறுதல் மெய்யே - உயிரானது உடம்பை விடுதல் உறுதியாகும்; கண்பால் - என்னுடைய கண்ணின் பக்கம்; உயர் காலன் அடுக்க வருமேனும் - யமன் அணுக வருமேயாயினும்; உண்பான் அருத்தியது - உண்ணவிரும்பிய செயலை; ஒழிப்பது அரிது - விலக்க முடியாது; என்றாள் - என்று கூறினாள். அரக்கி அனுமனைநோக்கி “என்னைப் பெண்தானே என்று கருதாதே; எனக்கு முன் வந்தால் உண்பேன்” என்று கூறினாள். பெற்றி - தன்மை. வீடுவது - அழிவது. மெய் - உறுதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Give up thinking of me as a mere woman! If they come near me,
- even those in heaven surely lose their lives!
- Even if lofty Death himself came close before my eyes,
- it would be hard to stop my craving to eat!” she said.
What the poem says
Aṅkāratārai warns Aṉumaṉ not to take her lightly because she is female. Anyone who comes near her dies, even the gods, and even Death himself could not stop her from devouring what she has set her heart on.