கம்பராமாயணம் 4870 · சுந்தர 2.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவள் திறந்தாள்எயிற்றை - (அனுமனை விழுங்க) அங்காரதாரை வாயைத் திறந்தாள்; அண்ணல் - பெருமையை உடைய அனுமன்; இடை - அந்த வாயின் வழியில்; சென்றான் - போனான்; இறந்தான் எனக்கொடு - அனுமன் இறந்து விட்டான் என்று நினைத்துக்கொண்டு; அறம் அரற்றியது - அறக்கடவுள் கதறியது; அமரர் எய்த்தார் - தேவர்கள் வருந்தினர்; பெரிய கோளரி - பெரிய சிங்கம் போன்ற அனுமன்; ஓர் இமைப்பதனின் முன்னர் - ஒருமுறை கண்ணை இமைப்பதற்கு முன்பு; பிறந்தான் என - பிறந்து விட்டான் என்று கூறும்படி; பெயர்ந்தான் - திரும்பி வந்தான். அனுமன் அரக்கியின் வாயின் வழியில் வயிற்றில் புகுந்தான். அது கண்டு அறம் அரற்றியது. தேவர்கள் வருந்தினர். அப்போது அனுமன் இமைப்பதன் முன்பு பிறந்தான் என்று கூறும்படி திரும்பினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She opened her fanged jaws! The noble one went in between them!
- Dharma itself wailed! The immortals grew faint with despair!
- Thinking, “He is dead,” they grieved; and before an eye could blink,
- as if he had been born again, the great lion came back out!
What the poem says
Aṅkāratārai opens her jaws and Aṉumaṉ dives straight in. Dharma cries out and the gods despair, sure that he has been killed. But before anyone can blink, the lion-like Aṉumaṉ bursts out again, as if he had been born anew.