கம்பராமாயணம் 4872 · சுந்தர 2.84

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சாகாவரத்தலைவரில் - இறவா வரம் பெற்ற சிரஞ்சீவிகளில்; திலகம் அன்னான் - திலகம் போன்ற அனுமன்; ஏகா - அரக்கியின் வயிற்றினுள் சென்று; உடன் - விரைவில்; அரக்கி குடர்கொண்டு - அரக்கியின் குடலை எடுத்துக்கொண்டு; எழுந்தான் - மேலே எழுந்தான்; (அவன்) மாகால் விசைக்க - பெரிய காற்றடிக்க; வடம்மண்ணில் உற - கயிறானது மண்ணில் இருக்க; வாலோடு - வாலுடனே; ஆகாயம்உற்ற கதலிக்கு - ஆகாயத்திற் பறக்கின்ற காற்றாடிக்கு; உவமையானான் - ஒப்புமையானான்.

சிரஞ்சீவியர்கள் எழுவராவர். அசுவத்தாமன், மாபலி, வியாசன், அனுமன், விபீடணன், மார்க்கண்ட முனி, பரசுராமன் (பொருட்டொகை நி - 599) என்பவர். அவருள் அனுமன் சிறந்தவன் என்று கவிச்சக்கரவர்த்தி திருவுளம் பற்றுகிறார். ஆதலின் சாகாவரத் தலைவரில் திலகம் அன்னான் என்றான். கதலி - காற்றாடி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who is the forehead-mark among the lords who hold the boon of deathlessness
  2. went in, and at once rose up with the demoness's entrails;
  3. as the great wind blew, with the cord reaching down to the earth,
  4. he became like a kite with its tail, flying up in the sky.

What the poem says

Aṉumaṉ, the finest of the deathless ones (tradition counts seven immortals, among them Aśvatthāma, Mahābali, Vyāsa, Vibhīṣaṇa, Mārkaṇḍēya and Paraśurāma), rises with Aṅkāratārai's entrails trailing down to the earth below. In the strong wind he looks like a kite in flight, its long string running down to the ground and its tail streaming behind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cākā varat talaivaril tilakam aṉṉāṉ
ēkā arakki kuṭar koṇṭu uṭaṉ eḻuntāṉ
mā kāl vicaikka vaṭam maṇṇil uṟa vālōṭu
ākāyam uṟṟa katalikku uvamai yāṉāṉ!