கம்பராமாயணம் 4873 · சுந்தர 2.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன் செயலைக்கண்டு) வானவர்கள்ஆர்த்தனர் - தேவர்கள் ஆரவாரம்செய்தனர்; தானவர் அழுங்கா வேர்த்தனர் - அசுரர்கள் மனம் வருந்தி (அச்சத்தால்) உடல்வெயர்த்தனர்; விரிஞ்சனும் - பிரம்மதேவனும்; வியந்து - ஆச்சரியப்பட்டு; மலர் வெள்ளம் தூர்த்தனன் - மலரை வெள்ளம் போல் தூர்த்தான்; அகன்கயிலையில் தொலைவிலோனும் - அகன்ற கயிலை மலையில் உள்ள இறுதியில்லாத சிவபெருமானும்; பார்த்தனன் - கடைக்கணித்தான்; முனித்தலைவர் - தலைமை சான்ற முனிவர்கள்; ஆசிகள் பகர்ந்தனர் - வாழ்த்துக்களை கூறினார். அனுமனின் செயலைக் கண்டு தேவர்களும் தெய்வங்களும் அடைந்த மகிழ்ச்சி பேசப்படுகிறது. ஆர்த்தனர்கள் - கள், அசை - விகுதிமேல் விகுதி என்பர். திருமால் இராமனாக அவதரித்தமையின் மும்மூர்த்திகளில் இருமூர்த்திகளே பேசப்படுகின்றனர். தனுவின் புதல்வர்கள் ஆகையினால் அசுரர்கள் தானவர் என்று கூறப்பெற்றனர். பார்த்தனன் - அருளொடு நோக்கினான். பாராயோ என்னை முகம் - பார்த்து ஒருகால் என் கவலை தீராயோ என்பர் தாயுமானவர். தொலைவிலோன் - சிவபெருமான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods shouted with joy; the Dānavas, in distress,
- broke into a sweat; Viriñcaṉ too, marvelling, heaped up
- a flood of flowers; He who has no end, on broad Kayilai,
- looked on with favour; and the chief of the sages spoke their blessings.
What the poem says
Heaven rejoices at Aṅkāratārai's death: the gods cheer, the demons (Dānavas) sweat with fear, Piramaṉ showers flowers, Civaṉ looks down from Kailāsa with grace, and the great sages bless Aṉumaṉ. The commentary notes that only two of the three great gods are named here, because the third, Tirumāl, is on earth as Irāmaṉ.