கம்பராமாயணம் 4875 · சுந்தர 2.87

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சொற்றார்கள் சொற்றதுணை பல தொகையது அன்றோ?
முற்றா முடிந்த நெடு வானின் இடை முந்நீ
ரில் தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை
உற்றால் விலங்கும் இடையூறு 'என உணர்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

சொற்றார்கள் - வழியைக்கூறியவர்கள்; சொற்ற - கூறிய துன்பங்கள்; தொகை அல்ல - எண்ணுக்கு உட்பட்டவை அல்ல; துணை ஒன்றோ - அத்துன்பங்களை நீக்கும் துணை ஒன்றா (பல); நெடுவானின் இடை - பெரிய ஆகாயத்தில் (அவைகள்); முற்றாமுடிந்த - அடியோடும் ஒழிந்துபோயின; முந்நீரில் தாவி - கடலில் தாவிப்போய், எற்று எனினும் - எத்தகைய இடையூறு வந்தாலும்; யான்இனி - நான் இப்போது; இலங்கை உற்றால் - இலங்கையை அடைந்தால்; இடையூறு விலங்கும் - இடையூறு விலகிப் போகும்; என உணர்ந்தான் - என்று (அனுமான்) அறிந்தான்.

வழி கூறியவானரர்கள் குறித்த துன்பங்கள் மிகப்பல. அவற்றை நீக்கும் துணைகளும் பல. அத்துன்பங்கள் யாவும் ஒழிந்தன. யான் இலங்கை அடைந்தால் துன்பம் முற்றும் நீங்கும் என்று அனுமன் கருதினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The perils those who told the way spoke of were past counting; and is the help I have just one?
  2. In the long sky they are all utterly ended; having leapt across
  3. the sea, whatever may come, now that I am about to reach Ilaṅkai,
  4. every obstacle will give way,” he realised.

What the poem says

Aṉumaṉ takes stock. Those who described the route warned of countless dangers, but his help has been just as plentiful, and every danger in the sky has now been overcome. With the sea crossed and Ilaṅkai close, he is sure that whatever else stands in his way will give way too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'coṟṟārkaḷ coṟṟa tokaiyalla; tuṇai oṉṟō?
muṟṟā muṭinta neṭu vāṉiṉ iṭai munnī
ril tāvi eṟṟu eṉiṉum yāṉ iṉi ilaṅkai
uṟṟāl vilaṅkum iṭaiyūṟu 'eṉa uṇarntāṉ.