கம்பராமாயணம் 4883 · சுந்தர 3.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வன்கொண்டல்விட்டு - வலிமையான மேகமண்டலத்தைப் பின்னே தள்ளிவிட்டு; மதிமுட்டுவன மாடம் - சந்திர மண்டலத்தை மோதுவனவான மாடிவீடுகள்; பொன்கொண்டு இழைத்த ? - பொன்னைக் கொண்டு செய்யப் பெற்றனவா (அதன்மேல்); மணியைக் கொடு பொதிந்த ? - மாணிக்கங்களைக் கொண்டு மூடப்பெற்றனவா ?; மின்கொண்டு அமைத்த? - மின்னலைக் கொண்டு அமைக்கப் பெற்றனவா (அதன்மேல்); வெயிலைக் கொடு சமைத்த ? - (சூரியனின் வெயிலைக் கொண்டு முலாம் பூசப் பெற்றனவா; என்கொண்டு இயற்றிய - எந்தப் பொருளைக் கொண்டு இயற்றப்பெற்றன; எனத் தெரிவு இலாத - என்று ஆராய்ச்சி செய்ய முடியாதபடி உள்ளன.
மணியைக் கொண்டுபொதித்த என்று கூறப்பெற்றதால் அதற்கேற்ப வெயிலைக் கொண்டு பொதிந்த என்பதற்கு வெயிலைக் கொண்டு முலாம் பூசப் பெற்றது என்று கூறப்பெற்றது. மாடம் - உப்பரிகை அமைந்த வீடு. கொண்டல், மதி என்பவை ஆகுபெயராக அந்த அந்த மண்டலத்தை உணர்த்தின. இப்பாடல் முதல் 36வரை அனுமனின் எண்ண ஓட்டம். கவியின் மொழியன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wrought of gold? Encased in gems?
- Fashioned of lightning? Made of sunlight?
- Built of what? — none can tell, so marvellous are
- the mansions that thrust past the strong clouds and butt against the moon!
What the poem says
This begins the canto of the search through the city. Night falls, the moon rises, and by its light Aṉumaṉ takes in Ilaṅkai. From this verse on, for many verses, we hear his own thoughts rather than the poet's narration.
He is dazzled by the mansions, which rise beyond the clouds to strike the moon. He cannot work out what they are made of: gold overlaid with gems, or lightning overlaid with sunshine. "Clouds" and "moon" stand for the regions of sky where they are found.