கம்பராமாயணம் 4884 · சுந்தர 3.2

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நாக ஆலயங்கெளாடு நாகர் உலகும் தம்
பாகு ஆர் மருங்கும் இல என்ன உயர் பண்ப!
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும்
மாகால் வழங்கு சிறு தென்றல் என நின்ற!

பொருள் · Meaning in Tamil

நாகாலயங்களொடு- நாகங்கள் வாழும் பாதாள உலகமும்; நாகர் உலகும் - தேவர்கள் வாழும் விண்ணுலகமும், தம் - தம்முடைய; பாகு ஆர்மருங்கு - அழகு நிரம்பிய பக்கத்தில்; துயில்வ என்ன - தங்குவன என்று கூறும்படி; உயர்பண்ப - உயரிய இயல்பைப் பெற்ற மாடங்கள்; ஆகாயம்அஞ்ச - விண்ணுலகம் அஞ்சும்படியாக; அகல் மேருவை அனுக்கும் - பரந்த மேருமலையை வருத்துகின்ற; மாகால் - பெரிய சண்ட மாருதமும்; வழங்கு சிறு தென்றல் - (மெல்ல) இயங்குகின்ற தென்றல் காற்று; என நின்ற- என்று கூறும்படி தலைநிமிர்ந்து நிற்பன. மாடங்களின் கீழ்ப் பகுதியில் பாதாளவுலகமும், மேற்பகுதியில் விண்ணுலகமும் தங்கியுள்ளன என்று கூறும்படி நிலவறைகளையும் மேல் உப்பரிகைகளையும் பெற்றுள்ளது என்பது கருத்து. மாகால் தென்றல் என நின்ற என்றதனால் மாடங்களின் உறுதி தெரிகிறது. பண்ப - பண்பை உடைய மாளிகைகள் - எழுவாய். நின்ற - பலவின்பால் வினைமுற்று. பயனிலை. பண்பநின்ற என்று கூட்டிப் பார்க்கவும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As though the serpents' realms below and the world of the gods
  2. lay sleeping at their beautiful sides, so lofty is their nature!
  3. The great gale that harries broad Mēru until the very sky takes fright
  4. they stand against as though it were a gentle southern breeze!

What the poem says

Aṉumaṉ admires the towering mansions of Ilaṅkai. Their deep underground chambers and high upper storeys make it seem as if the underworld of the serpents and the heaven of the gods rest at their lower and upper sides.

They are so solid that the cosmic gale, strong enough to shake Mount Mēru and frighten the sky, feels to them like a soft southern breeze.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nākālayaṅkaḷoṭu nākar ulakum tam
pāku ār maruṅku tuyilva eṉṉa uyar paṇpa!
ākāyam añca akal mēruvai aṉukkum
mākāl vaḻaṅku ciṟu teṉṟal eṉa niṉṟa!