கம்பராமாயணம் 4885 · சுந்தர 3.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செஞ்சொலவர் - செவ்வியசொற்களைப் பேசும் மகளிர்; மாகாரின் - பெரிய மேகத்தில் உள்ள; மின்கொடி - மின்னல் கொடிகளை; மடக்கினர் அடுக்கி - மடக்கி ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அடுக்கி, மீகாரம் எங்கணும் - உயர்ந்த மாளிகையின் எல்லாப் பகுதியினும் (உள்ள); நறுந்துகள் விளக்கி - நறுமணம் வீசும் மகரந்தக் குப்பைகளைத் துடைத்து (பிறகு); அங்கையினில் ஆகாய கங்கையினை - கைகளால் ஆகாய கங்கைநீரை; அள்ளி - முகந்து எடுத்து; வீசுபடுகாரம் - தெளிக்கின்ற திறமை; பாகுஆய - அழகாக உள்ளது. படுகாரம் - பாகாய எனக்கூட்டுக. படுகாரம் என்பதற்குப் பெரிய வீடு என்று பொருள்கூறி அது அழகாக உள்ளது என்றும் கூறுவர். மேல்தளங்களில் உள்ள குங்குமத் துகள்களை விளக்கி, ஆகாய கங்கை நீரைக் கையாலே முகந்து தெளிக்கும் சாமர்த்தியம் அழகாயது என்பது பழைய உரை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Folding the lightning-vines of the great dark clouds and stacking them up,
- wiping away the fragrant dust from every part of the high terraces,
- scooping up the heavenly Gaṅgā in the hollow of their hands,
- the sweet-spoken women sprinkle it — lovely is that skill!
What the poem says
The mansions are so high that the women on their roofs reach into the sky itself. They fold away the lightning from the clouds as if it were cloth, sweep the fragrant pollen and saffron dust off the upper floors, and sprinkle the floors with water scooped from the Gaṅgā of heaven.
The commentary notes that the last word can also be read as "a great house", so that it is the house itself that is called beautiful.