கம்பராமாயணம் 4886 · சுந்தர 3.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பஞ்சி ஊட்டிய - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்றதும்; பரட்டு இசை கிண்கிணி - கெண்டைக்காலில் அமைந்த கிண்கிணியோடு கூடியதும் (ஆகிய), பதுமம் - தாமரை போன்ற பாதங்களின்; செஞ்செவி - செம்மையான அழகிய; செழும் பவளத்தின் - செழிப்பான பவளம் போன்ற விரல்களின்; கொழும்சுடர் சிதறி - ஒளியானது பரவி; மஞ்சின் - மேகத்தின்; அஞ்சன நிறம் மறைத்து - மையை ஒத்த கரிய நிறம் மறையச் செய்து; அரக்கியர் வடித்த - அரக்கியர்கள் ஒழுங்கு செய்த; அம்சில் ஓதியோடு - அழகிய மென்மையான (சிவந்து கூந்தலுடன்; உவமைய ஆக்குற - ஒப்புமையாகச் செய்ய; அமைவ - பொருந்தியிருப்பன.
மகளிரின் கால்விரலின் ஒளிபட்டு கரிய மேகம் அரக்கியரின் சிவந்த கூந்தலின் நிறத்தைப் பெற்றது. பரடு அமை கிண்கிணி - கெண்டைக் காலில் அமைந்த கிண்கிணி; பரடுபுல்லிக் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப (சிந்தாமணி - இலக்கணை 98) சுடர் - எழுவாய். சில் ஓதி - மென்மையான கூந்தல். மா- விளம் - விளம் - மா எனும் சீர்களை முறையே பெற்றுவரும் இக் கலித்துறை. இத்தகைய பாடல்கள் 1223 இந்நூலில் உள்ளன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From lotus feet dyed with red lac and bound at the ankle with chiming bells,
- the rich glow of the fine red coral of the toes spills out
- and hides the collyrium-black of the clouds, so that they become fit
- to be likened to the soft, lovely tresses the demon women dress!
What the poem says
Another image of the height of the mansions. The red glow from the hennaed toes of the women walking on the rooftops colours the dark clouds that pass beside them.
The clouds, turned reddish, now look like the hair of the demon women, which tradition imagines as tawny-red. The verse begins a new metre, the kalitturai.