கம்பராமாயணம் 4889 · சுந்தர 3.7

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இனைய மாடங்கள், இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின், அச் சொல்லும் மாசு உண்ணும் :
அனையவாம் எனின், அரக்கர்தம் திருவுக்கும் அளவை,
நினையலாம்? அன்றி உவகையும் அன்னதாய் நிற்கும்!

பொருள் · Meaning in Tamil

இனைய மாடங்கள்- இப்படிப்பட்ட மாடிவீடுகள்; இந்திரற்கு அமைவர - இந்திரன் இருப்பதற்கு ஏற்ப; எடுத்த மனையின் - கட்டப்பெற்ற அரண்மனையின்; மாட்சிய என்னின் - சிறப்புடையன என்று கூறினால்; அச்சொல்லும் மாசுண்ணும் - அச்சொல்லும் குற்றப்படும்; அனையது ஆம் எனின் - அவ்வாறு கூறுவதே குற்றம் என்றால்; அரக்கர்தம் திருவுக்கும் - அரக்கர்களின் செல்வத்துக்கும்; அளவை - எல்லையை; நினையலாம் அன்றி - மனத்தாலே எண்ணலாம் அன்றி; உவமையும் - (அதற்குக் கூறப்படும்) உவமானமும்; அன்னதாய் நிற்கும் - அந்த 'மாட்சிய' என்னும் சொல்லைப் போல் மாசுபட்டுப் போகும்.

சொல்லுக்கு மாசாவது ஏற்பக் கூறாமல் ஏதோ கூறல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. These mansions — if one says that, like the palace raised to befit Intiraṉ,
  2. they are splendid, even that word is stained;
  3. and if that is so, then the measure of the demons' wealth
  4. can only be imagined — any comparison too would stand stained the same way!

What the poem says

Aṉumaṉ finds that no comparison fits the mansions of Ilaṅkai. To say they are as fine as the palace of Intiraṉ, king of the gods, would be to say something unfitting, and so to stain the word "splendid".

If even that praise falls short, the wealth of the demons has no measure that words can give. One can only try to picture it in the mind, and every comparison offered would be just as inadequate.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉaiya māṭaṅkaḷ, intiraṟku amaivara eṭutta
maṉaiyiṉ māṭciya eṉṉiṉ, ac collum mācuṇṇum:
aṉaiyatām eṉiṉ, arakkartam tiruvukkum aḷavai,
niṉaiyalām? aṉṟi uvamaiyum aṉṉatāy niṟkum!