கம்பராமாயணம் 4890 · சுந்தர 3.8

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மணிகள் எத்துணை பெரியவும், மால் திரு மார்பின்
அணியும் காசினும் அகன்றன உள எனல் அரிதால்;
திணியும் நல் நகர்த் திருமனை, தெய்வமாத் தச்சன்
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அத் தொழில்கள்!

பொருள் · Meaning in Tamil

எத்துணை பெரிய மணிகள் - எவ்வளவு பெரிய மாணிக்கங்களும்; மால் - திருமால்; திருமார்பின் அணியும் - அழகிய மார்பில் அணிந்துள்ள; காசினுக்கு அகன்றன உள எனல் - கவுத்துவம் என்னும் மணியைவிடச் சிறந்துள்ளவை உள்ளன என்று கூறுவது இல்லை; (அதைப்போல்) தெய்வமாத் தச்சன் - தேவதச்சன் (மயன்); துணிவின் வந்தனன் - உறுதியுடன் வந்து; தொட்டு அழகு இழைத்த - (பிறரை ஏவாமல்) தன் கையில் தொட்டு; அத்தொழில்கள் - செய்த வேலைப்பாடுகள்; நல்நெடுந்திருநகர் - நல்ல பெரிய இலங்கையில், திணியும் - (ஒப்பற்றுச் செறிந்திருக்கும்.

அதுபோல் எனும் உவம உருபு மறைந்துள்ளமையால் எடுத்துக் காட்டுவமையணி. காசு - மணி. தெய்வமாத்தச்சன் - மயன். விசுவகன்மன் என்றும் கூறலாம். இந்தக் கவி அன்மயப் பொருள் என்பது பழைய உரை. அன்மயம் - கொண்டுகூட்டுப் பொருள்கோள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. However large other gems may be, that any surpass the jewel
  2. worn on the sacred breast of Māl is hard to claim; just so, packed close in this fine, vast, glorious city,
  3. unrivalled, are the works that the divine master-builder,
  4. coming with resolve, wrought in beauty with his own hand!

What the poem says

Just as no gem, however large, can be said to excel the Kaustubha jewel on Viṣṇu's breast, nothing can rival the craftsmanship that fills Ilaṅkai.

That work was done by the architect of the gods, Mayaṉ (some say Vicuvakaṉmaṉ), who came in person and shaped it with his own hands instead of leaving it to others. The comparison is an example by illustration, with the word "like" left unsaid.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇikaḷ ettuṇai periyavum, māl tiru mārpiṉ
aṇiyum kāciṉukku akaṉṟaṉa uḷa eṉal aritāl;
tiṇiyum nal neṭum tirunakar, teyvamāt taccaṉ
tuṇiviṉ vantaṉaṉ toṭṭu aḻaku iḻaitta at toḻilkaḷ!