கம்பராமாயணம் 4891 · சுந்தர 3.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மரம் அடங்கலும் - (இலங்கையில்) எல்லா மரங்களும், கற்பகம் - கற்பக மரங்கள்; மனை எலாம் - எல்லா வீடுகளும்; கனகம் - பொன்னால் கட்டப்பட்டவை; அரக்கியர்க்கு - அரக்கப் பெண்களுக்கு; சிலதியர் அரமடந்தையர்- தொண்டு புரிபவர் தேவமகளிர்; (அரக்கர்களுக்கு அமரர்- தேவர்கள்; உரம் மடங்கி வந்து - வலிமை ஒடுங்கி (அரக்கர் வீட்டுக்குவந்து; உழையராய் உழல்குவர் - பணியாளராய் வருந்துபவர்கள்; இது - இந்தச்சிறப்புகள்; ஒருவர் தரம் அடங்குவது அன்று - ஒருவனுடைய தகுதியால் வந்து சேர்வது அன்று; தவம் செய்த - தவங்கள் எல்லாம் கூடிச் செய்த; தவமால் - தவத்தின் பயனாகும். தரம் - தகுதி. ஒருவர் தகுதியால் பெற்ற சிறப்புகள் அளவுபட்டிருக்கும். இது அளவு கடந்திருத்தலின் தவத்தின் பயன் என்று கூறப்பெற்றது.
தவம் செய்த தவம் - நல்வினைகளால் உண்டான தவம். தவமும் தவம் உடையார்க்கு ஆகும். என்னும் குறளுக்கு மணக்குடவர் தவம் செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும் என்று கூறினார்.
பெரும்பான்மையான பாடம் 'தவம் செயத் தகுமால்' என்பது. அப்பாடம் அரக்கர் தவத்தால் சிறப்புப்பெற்றனர் ஆகையால் 'தவமே செய்யத் தரும்' என்று பொருள் தரும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Every tree is a kalpaka; every house is gold;
- the heavenly maidens are handmaids to the demon women; the gods,
- their strength broken, come and toil as servants; this is not something
- within the measure of one person's merit — it is the fruit of penance upon penance!
What the poem says
Aṉumaṉ lists the wonders of Ilaṅkai. All its trees are the wish-granting kalpaka trees of heaven, and its houses are made of gold. Celestial women wait on the demon women, and the gods themselves, humbled, work as servants in demon households.
Such fortune is too great to come from any one person's merit. It can only be the fruit of a vast store of past penance, a "penance made of penances". The commentary notes a common variant reading meaning "so penance alone is worth doing".