கம்பராமாயணம் 4892 · சுந்தர 3.10

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திருநகர்க்கு இறைவற்கு - இந்த இலங்கை அரசனுக்கு; தேவர் என்பவர் யாரும் - தேவர் என்று சொல்லப்படுபவர் அனைவரும், ஏவல் செய்பவர்- அடிமைப் பணி புரிவோர்; (ஏவல் செய்கிலாதவர் எவர் என்னின் - (அவனுக்கு) பணிபுரியாதவர் எவர் என்றால்; மூவர் தம்முளும் - மும்மூர்த்திகளில், ஒருவன் - ஒருவனாகிய பிரமதேவன்; அங்கு - அந்த இலங்கையில்; உழையனா முயலும் - பணிசெய்பவனாக முயல்கின்றான்; தா இல் மாதவம் அல்லது - குற்றமற்ற பெருந்தவம் அல்லது; பிறிது ஒன்று தகுமோ - வேறு ஒன்று செய்தற்குத் தகுதியுடையது ஆகுமோ.

உழையன் -அருகிருப்போன்; ஏவல்கூவல் செய்பவன். தேவரும் பிரமதேவனும் ஏவலர் ஆனது மாட்சியால் என்பதால் தவத்தால் எதையும் பெறலாம் என்பது விளங்கும். தவமே செய்யத்தக்கது என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All who are called gods are servants to the lord
  2. of this glorious city; and if you ask who of them does not serve him,
  3. even one of the Three toils there as his attendant!
  4. What could bring this about but flawless great penance?

What the poem says

Every god serves Irāvaṇaṉ, lord of Ilaṅkai. Even one of the three great gods, Brahmā, works for him as an attendant.

For Aṉumaṉ this proves the power of penance: Irāvaṇaṉ won such dominion through the severe austerities he once performed. Nothing else could raise anyone so high, so penance is the thing truly worth doing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvar eṉpavar yārum it tirunakarkku iṟaivaṟku
ēval ceypavar ceykilātavar evar? eṉṉiṉ
mūvar tammuḷum oruvaṉ aṅku uḻaiyaṉā muyalum!
tāvil mātavam allatu piṟitoṉṟu takumō?