கம்பராமாயணம் 4893 · சுந்தர 3.11

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலில், புறம்போய்
நேர் இயன்ற வன் திசைதொறும் நின்ற மா நிற்க,
ஆரியன் தனித் தெய்வ மாக் களிறும், ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேருமே, இந்நகர்த் தொகாத!

பொருள் · Meaning in Tamil

போர் இயன்றன - போரைச்செய்ய உடன்பட்டு; தோற்ற என்று - தோற்றுப் போயின என்று; இகழ்தலின் - (இராவணன்) அலட்சியம் செய்தமையால்; புறம்போய் - வெளியே சென்று; நேர் இயன்ற - எதிரெதிராக உள்ள; வன்திசை தொறும் - வலிமைமிக்க திசைகள் தோறும், நின்றமா - நிற்கின்ற யானைகள்; நிற்க - ஒதுங்கி நிற்க; இ நகர் தொகாத - இந்நகரைச் சாராதவைகள் (யானைகளில்); ஆரியன் - (யானைகளில்) சிவபிரான் பெற்றெடுத்த; தனி ஐங்கரக் களிறும் - ஒப்பற்ற ஐந்து கரங்களைப்பெற்ற விநாயகராகிய யானையும், சூரியன் - தேர்களில் சூரியனின்; ஓர் ஆழித் தனித்தேருமே - ஒரு சக்கரத்தையுடைய ஒப்பற்ற தேருமே யாகும்.

ஐங்கரக் களிறு - விநாயகப் பிரான், ஆரியன் என்றது தட்சிண மூர்த்தியான சிவபிரானை. பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியன் என்பார் மணிவாசகர். ஆரியன் சாஸ்தா என்றும் கூறலாம். சாஸ்தாவின் வாகனம் யானை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because he scorned them — 'They took up battle and were beaten' — they went outside,
  2. the great beasts that stand at each of the mighty opposing quarters; leaving them aside,
  3. only the peerless five-handed elephant of the Noble One, and the one-wheeled
  4. matchless chariot of the Sun, are not gathered in this city!

What the poem says

The elephants that guard the eight directions fought Irāvaṇaṉ and lost. He despised them for their defeat and left them outside his city.

Apart from them, every fine elephant and chariot in the universe has been brought into Ilaṅkai, with only two exceptions. One is the five-handed elephant Vināyaka, son of the "Noble One", Śiva. The other is the Sun's chariot with its single wheel.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōr iyaṉṟaṉa tōṟṟa eṉṟu ikaḻtaliṉ, puṟampōy
nēr iyaṉṟa vaṉ ticaitoṟum niṉṟa mā niṟka,
āriyaṉ taṉi aiṅkarak kaḷiṟum, ōr āḻic
cūriyaṉ taṉit tērumē, innakart tokāta!