கம்பராமாயணம் 4896 · சுந்தர 3.14

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மரகதத்தினும், மற்று உள மணியினும், வனைந்த
குரகதத் தனித் தேர் எலாம் இமைப்பு இல் பல் கோடி
இரவி வெட்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்,
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இந்நகர்க்கு!

பொருள் · Meaning in Tamil

மரகதத்தினும் - மரகதக்கற்களாலும்; மற்றுள - வேறுவகையாக உள்ள; மணியினும் - மாணிக்கங்களாலும்; வனைந்த - அமைக்கப்பட்ட; குரகதத் தடந்தேர் இனம் - குதிரைகளால் இயங்கும் தேர்க்கூட்டமாகிய; அவைபயில் - அவைகள் தங்கியிருக்கும் தேர்ச்சாலைகள்; இரவி - சூரியனும்; வெள்க நின்று - நாணம் அடையும்படி இருந்து; இமைக்கின்ற இயற்கைய - ஒளிவீசும் தன்மையுடையன; என்றால் - என்று கூறப்பெறுமானால்; இந்நகர்க்கு - இந்த இலங்கைக்கு (ஒப்புக்கூறின்); நல்நெடும் துறக்கம் - நல்லபெரிய சுவர்க்கம்; நரகம் ஒக்கும் - நரகமே போன்றிருக்கும்.

இமைத்தல் - ஒளி வீசுதல்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fashioned of emeralds and of other gems besides,
  2. the sheds where throng the great horse-drawn chariots
  3. shine by nature so that even the Sun is put to shame; if so,
  4. then fine, lofty heaven itself is like hell beside this city!

What the poem says

Even the chariot sheds of Ilaṅkai are built of emeralds and other precious stones, and they shine brightly enough to shame the Sun.

If its stables are like this, Aṉumaṉ concludes, then heaven itself, compared with this city, would seem no better than hell.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1marakatattiṉum, maṟṟu uḷa maṇiyiṉum, vaṉainta
kurakatat taṭantēr iṉam avaipayil koṭṭil
iravi veḷka niṉṟu imaikkiṉṟa iyaṟkaiya eṉṟāl,
narakam okkumāl nal neṭun tuṟakkam innakarkku!