கம்பராமாயணம் 4897 · சுந்தர 3.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அழகைப் பருகும்- உலக அழகையெல்லாம் தன்பால் அடக்கும்; இந்நகர் - இந்த இலங்கையில், துன் ஒளி - நிரம்பிய ஒளியானது; பாய்தலின் - (எங்கும்) பரவுதலாலே; திருகும் - மாறுபட்ட; வெஞ்சினத்து அரக்கரும் - கொடுங்கோபத்தை உடைய அரக்கர்களும்; கருநிறம் தீர்ந்தார் - கரிய நிறம் நீங்கப் பெற்றனர்; அருகு - பக்கத்தில்; போகின்ற திங்களும் - செல்கின்ற சந்திரனும்; மறு அற்றது - (தன்பால்பெற்ற) களங்கம் நீங்கியது; உலகு சூழ் உவரி - உலகைச் சுற்றியுள்ள கருங்கடல்; பசும்பொன் - மாற்றுயர்ந்த பொன்னானது; உருகுகின்றது போன்று உளது - உருகி அலையடிப்பது) போன்றுள்ளது.
அருகு பேர்கின்ற திங்கள் என்னும் பாடம் சிறக்கும். பேர்கின்ற என்பது போகின்ற என்றும் படிக்கப்படும். பேர்தல் - நிலை குலைதல். உவரி - கருங்கடல், பசும்பொன் - மாற்று உயர்ந்த பொன் (புறம் 141).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even the demons of twisted, fierce wrath have lost their dark colour,
- and the moon passing close by is rid of its stain, because the dense light
- of this city that drinks in all beauty pours over everything; like fine gold
- melting and heaving is the salt sea that girdles the world!
What the poem says
The radiance of Ilaṅkai, which seems to have absorbed all the beauty of the world, floods everything around it.
In that light even the dark-skinned demons no longer look dark, and the moon passing nearby loses the shadow on its face. The black ocean around the island glows like a sea of molten gold. The commentary prefers a variant in which the moon "falters" as it passes, rather than simply passing.