கம்பராமாயணம் 4898 · சுந்தர 3.16

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றும் நின்று, அகல்வான்
கண்ட அத் தனிக் கடிநகர் நெடுமனை; கதிர்கட்கு
உண்டு அவ் ஆற்றல் என்று உரைப்பு அரிது! ஒப்பிடில், தம்முன்
விண்டவாய்ச் சிறு மின்மினி என்னவும் விளங்கா!

பொருள் · Meaning in Tamil

அண்டம் முற்றவும்- எல்லா அண்டங்களிலுமுள்ள; வீங்கு இருள் அகற்றி நின்று - நிரம்பிய இருளைப் போக்கிநின்று; அகல்வான்கண்ட - விரிந்த ஆகாயத்தை அளாவிய; அத்தனிக்கடிநகர் - அந்த காவலுடன் கூடிய இலங்கையிலுள்ள; நெடுமனை - பெரிய மாளிகை வீடுகள்; ஆற்றல் - அந்தப் பெரும் சக்தி; கதிர்கட்கு - (பல இடங்களில் திரியும்) பன்னிரண்டு சூரியர்களுக்கு; உண்டு என்று உரைப்பரிது - உள்ளது என்று கூறவியலாது; ஒப்பிடின் - (கதிர்களை நகர மனையுடன் ஒப்பிட்டுக் கூறினால், தம்முன் - தங்கட்கு முன்னே; விண்டவாம்- தோற்றுப் போனவாம்; சிறு - சிறிய; மின்மினி என்னவும் - மின்மினியைப் போலக்கூட; விளங்கா - ஒளிவிட்டு விளங்கா.

கவிச்சக்கரவர்த்தி புறப்பாட்டைக் கருதினார் போலும் (புறம்5)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Driving off the swelling darkness of the whole cosmos, reaching into the wide sky,
  2. stand the tall mansions of that peerless guarded city; that the suns
  3. possess such power one cannot claim! If they are compared, before them
  4. the suns, outdone, would not shine even as little fireflies!

What the poem says

The mansions of Ilaṅkai give off enough light to drive the darkness out of the whole universe.

Not even the twelve suns of tradition have that power. Set beside these buildings, the suns would lose the contest and look no brighter than tiny fireflies. The commentary thinks Kampaṉ may have had a poem of the Puṟanāṉūṟu in mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṭam muṟṟavum vīṅku iruḷ akaṟṟi niṉṟu, akalvāṉ
kaṇṭa at taṉik kaṭinakar neṭumaṉai; katirkaṭku
uṇṭu av āṟṟal eṉṟu uraipparitu! oppiṭiṉ, tammuḷ
viṇṭavāyc ciṟu miṉmiṉi eṉṉavum viḷaṅkā!