கம்பராமாயணம் 4899 · சுந்தர 3.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேனும் சாந்தமும் - தேனையும் சந்தனத்தையும்; செறிநறும் - நறுமணம் செறிந்துள்ள; மான்மதச் சேறும் - கஸ்தூரிக் குழம்பையும்; வான நாள் - வானிலுள்ள நட்சத்திரங்களைப்போல; மலர்- மலர்ந்த; கற்பகமலர்களும் - கற்பகப் பூக்களையும்; வயமா- வெற்றி பெற்ற யானைகளின்; தானவாரியும்- மதவெள்ளத்தையும்; நீரொடு மடுத்தலின் - நதியின் நீருடன் உட்கொண்ட காரணத்தால்; அவ்வேலை - அக் கடலானது; தழீஇய மீனும் - தன்னைச் சார்ந்து வாழ்கின்ற மீன்களும்; தானும் - (கடலாகிய) தானும்; ஓர் வெறிமணம் கமழும் - ஒப்பற்ற தெய்வமணம் பெறும்.
கடலானது, தேன்முதலாகிய பொருள்களை நதியில் நீருடன் மடுப்பதால் மீனும் தானும் தெய்வமணம் பெற்றது. வெறி - தெய்வத்தன்மை - வெறியுறு சிறப்பு (தொல் - பொருள் நீர் என்றது நதியை. நீர்ப்பிணக்கு, நிலப்பிணக்கு என்னும் தொடர் காண்க - (தனிச்சுலோகி - கிட்நெதற நாள் - நட்சத்திரம். மலர் என்பது கற்பகத்தைச் சாராது மலரைச் சார்ந்தது, தழாத்தொடர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Honey, sandal paste, the thick fragrant mire of musk,
- kalpaka flowers blooming like the stars of the sky, and the musth-floods
- of mighty elephants — because it drinks these in with the river waters, the fish it holds
- and that sea itself breathe out a rare, divine fragrance!
What the poem says
The rivers of Ilaṅkai carry the city's luxuries down into the ocean: honey, sandal paste, musk, kalpaka flowers as many as the stars, and the scented fluid that flows from the temples of rutting elephants.
Having taken all this in, the sea and every fish in it give off a heavenly perfume.