கம்பராமாயணம் 4900 · சுந்தர 3.18

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெய்வத் தச்சனை புகழ்துமோ? செங்கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன்
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ? அறியாத்
தொய்யல் சிந்தையேம் யாவரை யாது என்று துதிப்பேம்?

பொருள் · Meaning in Tamil

தெய்வத்தச்சனைப் புகழ்துமோ ? - (இந்நகரை அமைத்த) தேவசிற்பியைப் புகழ்வோமா..?; செங்கண்வாள் அரக்கன் - சிவந்த கண்களையும் வாளையும் பெற்ற இராவணன், மெய் ஒத்து - சத்தியத்துடன் ஒன்றுபட்டு; ஆற்றிய - செய்த; தவத்தையே - தவம் ஒன்றையே; வியத்துமோ - மதிப்போமா? விரிஞ்சன் - பிரம்மதேவன் (வழங்கியது); ஐயப்பாடு இலா - சந்தேகத்துக்கு இடம் இல்லாத, வரத்தையே - வரத்தை மட்டும்; மதித்துமோ - மதிப்போமா? அறியா - (ஒன்றைத் தேர்ந்து புகழ்வதை) அறியாத; தொய்யல் சிந்தையேம் - தளர்ந்த மனத்தைப் பெற்ற யாம்; யாவரை - தச்சன், பிரம்மன் - இராவணன் என்னும் இவருள் எவரை; யாதென்று - எவ்வாறு; துதிப்போம் - புகழ்வோம்.

யாவரை யாதுஎன்று துதிப்போம் என்னும் பாடம் நிரம்பவுள்ளது. எவ்வகை துதிப்போம் என்னும் பாடம் சிறந்தது என்பது என் கருத்து. யாவரை - யாது என்று அமைத்தால் திணை வழுவுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Shall we praise the divine builder? The red-eyed demon of the sword —
  2. shall we marvel at the penance he wrought in truth? Viriñcaṉ's
  3. boon that leaves no room for doubt — shall we esteem that? Unable to discern,
  4. with faltering minds, whom shall we praise, and as what?

What the poem says

Aṉumaṉ cannot decide who most deserves credit for the city. It could be the divine architect who built it, or Irāvaṇaṉ, whose sincere and severe penance earned it. It could also be Viriñcaṉ (Brahmā), whose unfailing boon granted it.

His mind is too overwhelmed to choose between them. The commentary discusses which wording of the last line is best.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teyvat taccaṉaip pukaḻtumō? ceṅkaṇ vāḷ arakkaṉ
mey ottu āṟṟiya tavattaiyē viyattumō? viriñcaṉ
aiyappāṭu ilā varattaiyē matittumō? aṟiyāt
toyyal cintaiyēm yāvarai yāteṉṟu tutippōm?