கம்பராமாயணம் 4901 · சுந்தர 3.19

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கானும் பொழிலும் இவை - காடுகளும் சோலைகளும் ஆகிய இப்பொருள்கள்; செம் கனகத்தினாலும் - செந்நிறமுடைய பொன்னாலும்; ஏனைய மணியாலும் - மற்றமணியாலும், இயற்றியவேனும் - செய்யப்பெற்றிருந்தாலும்; யாவும் - (செயற்கையாக அங்கே உள்ள எல்லா மரங்களும்; தேனும் - தேனையும்; மலரும் - மலரையும்; கனியும் - பழங்களையும்; தர- வழங்கும்படி; செய்த செய்கை - அமைத்த வினைத்திட்பத்தை; வானும் - விண்ணுலகமும்; நிலமும் - மண்ணுலகமும்; பெறும் ஆறு - அடையும் வழிகள் (தவத்தைத் தவிர; இனிமற்றும் உண்டோ - இனி வேறும் உள்ளதா.

மற்றும் உண்டோ என்பதில் உள்ள உம்மை, அசை காமக்கடல் மற்றும் உண்டோ - என்னும் குறளில் பரிமேல் அழகர் 'உம்' அசை என்பார் பெறும் ஆறு மற்றுண்டோ எனச் சேர்க்க. பெறும் வகை உண்டோ என்றும் (வை. மு.கோ. பெறும் வழி வேறு எங்கேனும் உண்டோ (அடை - பதி) என்றும் கூறப்பெறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Is there any other way now for heaven and earth to win such a thing?
  2. These forests and groves, though made of red gold
  3. and of other gems, are every one of them
  4. so crafted that they yield honey, flowers and fruit!

What the poem says

The forests and groves of Ilaṅkai are artificial, made of red gold and precious stones. Yet they bear honey, flowers and fruit like living trees.

Aṉumaṉ asks whether heaven or earth could ever gain such skill except through penance like Irāvaṇaṉ's. It is the same theme that runs through his reflections here: the city's splendour is the fruit of austerity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉum nilaṉum peṟumāṟu iṉi maṟṟum uṇṭō?
kāṉum poḻilum ivai ceṅ kaṉakattiṉālum
ēṉai maṇiyālum iyaṟṟiya vēṉum yāvum
tēṉum malarum kaṉiyum tarac ceyta ceykai.