கம்பராமாயணம் 4902 · சுந்தர 3.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊரின் - இந்த இலங்கைமாநகரின்; இ - இந்த; நெடுங்கோபுரத்து - நீண்ட கோபுரத்தினுடைய உயர்ச்சி கண்டு உணர்ந்தால் - வளர்ச்சியைப் பார்த்து அறிந்தால்; (அறிஞர்களால்) நீரும் வையமும் நெருப்பும் - தண்ணீரும் மண்ணும் தீயும்; மேல்நிமிர் - மேல்நோக்கி வீசும்; நெடுங்காலும் - பெருங்காற்றும் என்று கூறப்பெற்ற பூதங்களின்; வாரிவானமும் - பெரும்பரப்பையுடைய ஆகாயமும்; தம் வளர்ச்சி - சிறப்புக்கள்; வழங்கல ஆகும் - கொண்டாடப்படாமல் போகும்; (இதையறிந்தால்) மேரு -மகாமேரு மலையானது; முழுமுற்றும் வெள்கி - (தன்னுடைய) உடல் முழுவதும் நாணத்தால் சுருங்கி; எங்ஙனம் விளர்க்குமோ - எப்படி வெளுத்துப் போகுமோ.
வையம் -பிருதிவி (மண்) வழங்குதல் - கொண்டாடப்படுதல். 'வழங்கு தாரவன்' என்னும் தேவரின் தொடருக்கு நச்சர் உலகம் கொண்டாடப்படுதலின் வழங்குதாரவன் என்றார், என விளக்கினார். (சிந-2504) அவற்றின் வளர்ச்சி வழக்கு வீழ்ந்தனவாகும் என்றும் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Water, earth, fire, the great wind rising high above,
- and the vast sky — their greatness would go unspoken
- once one had seen and grasped the height of the tall gate-towers of this city;
- how pale must Mēru grow, shrinking wholly in shame!
What the poem says
The gate-towers of Ilaṅkai are so lofty that the five elements (water, earth, fire, wind and the wide sky) would no longer be celebrated for their greatness once anyone had seen them.
Mount Mēru, the cosmic mountain famed for its height, would turn pale and shrink with shame on learning of these towers.