கம்பராமாயணம் 4903 · சுந்தர 3.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முன்னம் - முன்பு; யாவரும் - எல்லாப் புலவர்களும்; கதிர் - (ஆயிரம்) கதிர்களையுடைய சூரியன்; இராவணன் - (அழப்பண்ணும்) இராவணன்; முனியும் என்று எண்ணி - கோபிப்பான் என்று பயந்து கொண்டு; பொன்னின் மாநகர் மீ - பொன்மயமான இலங்கைக்கு மேலே; செலான் - போக மாட்டான்; எனப்புகல்வர் - என்று கூறுவார்கள்; (அவர்கள்) கன்னி ஆரையின் - பிறரால் பற்றப்படாத மதில்களின்; ஒளியினில் - பிரகாசத்தாலே; கண் வழுக்குறுதல் உன்னி - கண் கூசுதலை நினைந்து (சூரியன்); நாள்தொறும் - தினந்தோறும்; விலங்கினன் போதலை - விலகிச் செல்வதை; உணரார் - அறியார்.
கதிர் -சூரியன். உணரார் புகல்வார் என்க. பிறரால் பற்றப்படாதவள் கன்னி. அதுபோன்ற மதில். காவலில் கலையூர் கன்னியை ஒக்கும் (பால- அயோ - 9)
இருசுடர் வழங்காப்பெருமூதிலங்கை (ஆசிரிய மாலை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Long ago all the poets declared, 'Fearing Irāvaṇaṉ would be angry,
- the Sun will not pass above the great golden city';
- they do not see that, knowing his eyes would be dazzled by the light
- of its virgin walls, he swerves aside each day as he goes!
What the poem says
Earlier poets said that the Sun never crossed the sky over Ilaṅkai because he feared Irāvaṇaṉ's anger.
Aṉumaṉ offers a different reason. The city's walls are "virgin" because no enemy has ever taken them, and they shine so brightly that the Sun turns aside every day to keep his eyes from being dazzled. The commentary quotes an older line describing "great ancient Lanka, where the two lights do not travel".