கம்பராமாயணம் 4904 · சுந்தர 3.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கயிலையை எடுத்தான் - கயிலையைப் பெயர்த்து எடுத்த இராவணன்; தேவர் - தேவர்கள்; தீய செய்குநர் - தீமையைச் செய்பவர்கள்; அனையவர் - அந்தத் தேவர்கள்; சேரும் - இலங்கையை அடையும்; வாயில் இல்லது - வழியே இல்லாத; ஓர் வரம்பு அமைக்குவென் - ஒரு தடையை அமைப்பேன்; என - என்று; மதியா - ஆலோசித்து; காயம் என்னும் - ஆகாயம் என்று கூறப்பெற்ற; அக்கணக்கறு பதத்தையும் - அந்த முடிவற்ற மண்டலத்தையும்; கடக்க - தாண்டி அப்பாற் செல்லும்படியாக, ஏயும் - பொருந்திய; நன்மதில் இட்டனன் - நல்ல மதிலை (இலங்கைக்கு) அமைத்தான்.
வரம்பு - தடை. காதளவு வருவன, கடப்பன ஆகல் ஆகாது என இட்ட வரம்பு (தக்க - பரணி - /32உறை)
“ஏயும் நன்மதில்எடுத்தனன் கயிலையன்று எடுத்தான்” என்னும் பாடம் கட்டுரைச் சுவைபடவுள்ளது ஆல் - அசை ஆகையினாலே என்று பொருள் கூறினும் பிழையில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The gods are doers of evil; I will build a barrier
- with no gateway by which such as they may enter,' so he resolved,
- and so that it might pass beyond even that measureless region called the sky,
- he raised a fitting, mighty wall — he who lifted Kayilai!
What the poem says
Irāvaṇaṉ, who once lifted Mount Kayilai (Kailāsa), regarded the gods as his enemies and wanted a wall they could never get through.
So he built a wall around Ilaṅkai with no gate for them, and so high that it rose beyond the endless expanse of the sky. A variant reading neatly pairs "lifted the wall" with "lifted Kayilai".