கம்பராமாயணம் 4905 · சுந்தர 3.23

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந்த - ; அணி- அழகிய; மதிள் கிடக்கை நின்று - மதிளின் பரப்பிலிருந்து; அகத்தின் - இலங்கைக்குள்ளே; கறங்கு கால் புகா - சுழன்று வீசும் காற்றுகள் நுழையா; கதிரவன் ஒளி புகா - சூரியனின் வெப்பக்கதிர்கள் நுழையா; மறலி மறம் புகாது - யமனுடைய கொலைத்தொழில் நுழையாது; இனி - இனிமேல்; வானவர் புகார் என்கை - தேவர்கள் (போர் செய்ய எண்ணி) நுழையார் என்று கூறுதல்; வம்பே - வீண் மொழியாகும்; திறம்பு காலத்துள் - (பொருள்யாவும் மாறுபடும்) ஊழிக்காலத்தில்; யாவையும் சிதையினும் - எல்லாம் அழிந்தாலும்; சிதையா - விகாரம் அடையாத; அறம் - அறக்கடவுள்; புகாது - நுழையாது. மறம் - கொலைத்தொழில். மறம் திருந்தான் என்னும் கலிக்கு (குறிஞ்சி 2) கொலைத் தொழில் குறைவின்றித் திருந்திய கானவர் என்றார் நச்சர். கிடக்கை - பரப்பு. முருக அமர் பூமூரண் கிடக்கை - (பட்டினப்- 37) நச்- உரை புகுதல் என்பது நுழைதல் என்னும் சாதாரணப் பொருள் தராமல் போர் செய்யப்புகுதல் என்னும் பொருள் தந்தது. மேற்செலவு என்பது படை எடுப்பதைக்குறித்தலைப் போல.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. No whirling wind enters, no ray of the sun enters, the slaying might
  2. of Death does not enter; so to say now that the gods do not enter is idle talk!
  3. In the age when all things change, though all else perish, Dharma, which never perishes,
  4. does not enter — within, past the expanse of these fair walls!

What the poem says

Aṉumaṉ considers how impregnable Ilaṅkai is. Behind its walls no storm wind blows, no scorching sunlight falls, and even Death cannot do his work. To add that the gods cannot get in to attack would be saying nothing.

The verse ends with a pointed irony: even Dharma, righteousness itself, which outlasts the end of the world, cannot enter this city. The commentary notes that "enter" here carries the sense of entering to make war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṟaṅku kāl pukā, katiravaṉ oḷi pukā, maṟali
maṟam pukātu, iṉi, vāṉavar pukār eṉkai vampē!
tiṟampu kālattuḷ, yāvaiyum citaiyiṉum citaiyā
aṟam pukātu, inta aṇimatiḷ kiṭakkainiṉṟu akattiṉ!