கம்பராமாயணம் 4906 · சுந்தர 3.24

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொண்ட வான் திரைக் குரைகடல் இடையதாய்க் குடுமி
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற இயல்பால்,
பண்டு அரா அணைப் பள்ளியான் உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்து இருந்தது இவ் அணி நகர் அமைதி!

பொருள் · Meaning in Tamil

வான் திரை கொண்ட - பேரலைகளைத் தன்பால்கொண்டுள்ள; குரை கடல் இடையதாய் - ஒலிக்கின்ற கடலைச் சார்ந்ததாய்; எண்தவா - நினைவின் அளவுக்கு உட்படாத; விசும்பு - ஆகாயத்தை; எட்டநின்று - தொடும்படி நின்று; இமைக்கின்ற - ஒளி வீசுகின்ற, குடுமி எழிலால்- (நகரத்தின் மாட விமானங்களின் அழகால்; இ- இந்த; அணிநகர் அமைதி - அழகிய இலங்கையின் அமைப்பு; அராஅணைப் பள்ளியான் - பாம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டுள்ள திருமால்; பண்டு - முற்காலத்தில்; உந்தியில் பயந்த - தன்னுடைய உந்தியிலிருந்து வெளிப்படுத்திய; அண்ட மேயும் ஒத்து இருந்தது - (பொன்மயமான) முட்டையை ஒத்திருந்தது.

நீலக்கடலின் நடுவில் வானளாவி நிற்கும் பொன்மயமான இலங்கை நீலநிறமுடைய திருமாலின் உந்தியில் தோன்றிய பொன் முட்டையை ஒத்திருந்தது. அண்டம் - பொன்முட்டை. திருமாலின் உந்தியின்கண் முதலில் பொன்முட்டை தோன்றியது. அதிலிருந்து பிரம்மதேவன் பிறந்தான் என்று புராணம் பேசும். அண்டம் முற்றும் ஈன்றானை ஈன்ற சுவணத் தனி அண்டம் (கடல் தாவு 43)

ஏ, உம் இவைகள் அசை அண்டம் ஒத்துளது என்க. தேற்றப் பொருளும் உம்மைப் பொருளும் ஈண்டு ஒவ்வா.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Set in the midst of the roaring sea with its great waves, its peaks
  2. reaching up into the sky beyond reckoning and shining in their beauty,
  3. long ago he who lies on the serpent couch brought forth from his navel
  4. the cosmic egg — like that very thing was the form of this fair city!

What the poem says

Ilaṅkai, golden and rising to the sky out of the dark blue sea, reminds Aṉumaṉ of a creation myth. Viṣṇu, dark blue himself, lies on the serpent Ādiśeṣa. At the start of creation a golden egg came from his navel, and from it Brahmā was born.

The golden city in the middle of the blue ocean looks like that first golden egg of the universe.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṇṭa vāṉ tiraik kuraikaṭal iṭaiyatāyk kuṭumi
eṇ tavā vicumpu eṭṭa niṉṟu imaikkiṉṟa eḻilāl,
paṇṭu arā aṇaip paḷḷiyāṉ untiyil payanta
aṇṭamēyum ottu iruntatu iv aṇi nakar amaiti!