கம்பராமாயணம் 4908 · சுந்தர 3.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(நடனக் கொள்கையில்)
விஞ்சையர் மகளிர் - வித்தியாதரப் பெண்கள்; வான மாதரோடு இகலுவர்- தேவமகளிருடன் மாறுபட்டு ஆடுவார்கள்; ஆன மாதரோடு - வெற்றியடைந்த விஞ்சை மகளிருடன்; இயக்கியர் ஆடுவர் - இயக்கப் பெண்கள் ஆடுவார்கள்; சோனை வார் குழல் - மேகம் போன்ற கூந்தலைப் பெற்ற; அவரை - அந்த இயக்கப் பெண்களை (மாறுபட்டு); அரக்கியர் - அரக்கப் பெண்கள்; தொடர்குவர் - (ஆடலைத்) தொடர்ந்து மேற்கொள்வார்கள்; தொடர்ந்தால் - வாடாமல் ஆடினால்; ஏனை - மற்றைய; நாகியர் - நாகலோகப் பெண்கள்; அரு - அருமையான; நடக்கிரியை - நாட்டியத்துக்கென்று அமைக்கப்பட்ட கிரியைகளை; ஆய்ந்திருப்பார் - ஆராய்ந்தபடியிருப்பர் கிரியை - செயல். சிலம்பில் பண்ணுக்கு எட்டுக்கிரியைகள் பேசப்பட்டுள்ளன. இது போல் நாட்டியக் கிரியைகள் உண்டு. சோனைவார் குழல் அவரை என்பதைச் சேர்கிறது.
அரக்கியர் கூந்தல் மேகம் போன்று இராதே. தொல்காப்பியர் இங்ஙனம் சொல்லை மாற்றுதலை மொழிமாற்று என்பார் (எச்ச - 14)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The women of the Vidyādharas vie with the women of heaven;
- with those who prevail the Yakṣa women dance; after them
- the demon women follow on, and those of long cloud-dark tresses; and if they keep on,
- the remaining Nāga women stand studying the rare figures of the dance!
What the poem says
The dance contests of Ilaṅkai bring together women of every celestial race. Vidyādhara women compete with the women of heaven, Yakṣa women take on the winners, and demon women then take on the Yakṣas.
Meanwhile the Nāga women of the underworld study the difficult movements of the art. The commentary notes that "cloud-dark tresses" really belongs with the Yakṣa women, since demon women's hair is not imagined as dark. The poet has shifted the phrase out of its place, a figure the grammarians recognise.