கம்பராமாயணம் 4909 · சுந்தர 3.27

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அரக்கர்களுக்கு)

நிதியங்கள்- நவநிதிகளும்; உழையர் என்ன நின்று - பணியாளர்களைப்போல (ஒதுங்கி நின்ற); இழையும் ஆடையும் - ஆபரணங்களையும் ஆடைகளையும்; மாலையும் சாந்தமும் - மாலையையும் சந்தனத்தையும்; ஏந்தி உதவுவ - கைகளில் தாங்கிக் கொடுப்பன; இங்கு - இலங்கையில் (இது); ஒருவர் விழையும் போகம் - ஒருவர் அனுபவிக்கும் போகமாகும்; இது - இந்தப் போகத்தை; வாய்கொடு விளம்பின் - வாயால் எடுத்துக் கூறினால்; குழையும் - (கேட்பவர்களின் உறுதிப்பாடு) தளர்ச்சியடையும்; நெஞ்சினால் நினையினும் - மனத்தால் நினைப்பினும்; மாசு என்று - (என்னுடைய விரதத்துக்கு) குற்றம் என்று; கொள்ளும் - அனுமன் கருதினான்.

இது அனுமனின் எண்ண ஓட்டம். என்றனன் இலங்கை நோக்கி (42) என்னும் பாடலை நோக்கி (42) அறிக. கடல் தாவு படலத்தில் உள்ள விசும்பிடைச் செல்லும் வீரன் (77) எழுவாய்; என்றனன் பயனிலை.

மாசு என்றுகுறித்தான் (25) என்னும் பாடம் ஏற்கலாம் போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Holding up jewels, garments, garlands and sandal paste,
  2. the treasures stand by like servants and wait upon them! Is this here
  3. a pleasure any one person could crave? To speak of it aloud
  4. would weaken resolve! Even to think of it in the heart, he held a stain.

What the poem says

In Ilaṅkai even the divine treasures wait on the demons like servants, holding out jewels, clothes, garlands and perfume.

Such luxury is beyond what anyone could wish for. Aṉumaṉ, bound by his vow of continence, feels that describing it aloud would weaken a listener's self-control, and that even dwelling on it in his own mind is a fault.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻaiyum, āṭaiyum, mālaiyum, cāntamum, ēnti
uḻaiyar eṉṉa niṉṟu utavuva nitiyaṅkaḷ! oruvar
viḻaiyum pōkamē iṅku itu? vāykoṭu viḷampiṉ,
kuḻaiyum! neñciṉāl niṉaiyiṉum mācu eṉṟu koḷḷum!