கம்பராமாயணம் 4910 · சுந்தர 3.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நான்முகத்து ஒருவன் - நான்கு முகங்களைப் பெற்ற பிரம்மதேவன்; பொன்னின் மால்வரைமேல் - பெரிய பொன்மயமான மேருமலைபோல்; மணி பொழிந்தன பொருவ - மாணிக்கத்தைச் சொரிவன ஒப்ப; பன்னி - (தேவதச்சனைப் புகழ்ந்து; நின்று உன்னி - உறுதியுடன் ஆராய்ந்து; ஊழ்முறை உரைப்ப - நகர் அமைய வேண்டிய முறையைக் கூற; சொன்ன வானவர்தச்சன் - பிரம்மனால் சொல்லப்பெற்ற தேவதச்சன்; பலநாள் - பலநாட்கள்; பணி உழந்து - வருந்திப் பணியை மேற்கொண்டு; இந்நகர் - இந்த இலங்கை மாநகரை; துதிப்பான் - உலகம் கொண்டாடும்படி; அரிதினில் படைத்தான் - அருமையாகச் சிருட்டித்தான். நன்கு பணிசெய்யும் பொருட்டுப் பணியாளனைப் புகழ்வது சால்பென்க. சொர்ணாபிஷேகம் என்னும் வழக்கை நோக்கவும். பொன்னின் மலைமேல் மணி பொழிந்தாற்போலத் தேவதச்சன், இந்நகரைப் படைத்தான் என்று பொருள் கூறப்பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like gems showered down upon a great mountain of gold —
- so, with steady thought, the Four-faced One laid down the proper order,
- praising him, and toiling at the task for many days, he made it with rare skill,
- the builder of the gods whom he named: this city, for the world to praise!
What the poem says
Brahmā, the Four-faced One, praised the architect of the gods and explained exactly how the city should be laid out. The architect then worked for many days and built Ilaṅkai with rare skill.
The result looks like a golden mountain showered with gems. The commentary remarks that praising a craftsman so that he does his best work is the proper course, and compares the custom of honouring a master with a shower of gold.