கம்பராமாயணம் 4911 · சுந்தர 3.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மகர வீணையின் - மகரவடிவாய் அமைந்த வீணையில் தோன்றிய; மந்தர கீதத்து - மென்மையான கீதத்தினாலே; சகரவேலையின் - சகரரால் தோண்டப்பெற்ற கடலினுடைய; ஆர்கலி மறைந்த - பேரொலி மறைந்துவிட்டன; திசை முகம் தடவும் - நான்கு திசைகளையும் தடவுகின்ற; சிகரம் - விமானங்களைப் பெற்ற; மாளிகைத் தலம் தொறும் - மாளிகையின் இடங்கள் தோறும்; தெரிவையர் தீற்றும் - பெண்கள் புகைக்கின்ற; அகருதூமத்தின் - அகிலின் புகைப்பரப்பில், முகில் குலம் அனைத்தும் - எல்லா மேகக் கூட்டங்களும்; அழுந்தின - மறைந்து விட்டன. மந்தரகீதத்தில் கடல் ஒலி அடங்கிவிட்டன. அகிற்புகையில் மேகங்கள் மறைந்தன. மந்தரம் - மெல்லோசையால் பாடுதல் மந்தரம், மத்துமம், தாரம் இவை மூன்றில் (கல்லாடம் 2/- 50) மந்தரம் - படுத்தல். இசை கேட்டுக் கடல் அமைதி பெற்றது. ஏழுகடலும் இடை துளும்பா (பெரிய புரா- ஆனாயர் - 35) இப்பாடலில் இசையின் அமைதியும் புகையின் மிகுதியும் பேசப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Drowned by the soft low songs of the makara-shaped vīṇās
- is the roar of the sea of the Cakarar! On every floor of the peaked mansions
- that brush the faces of the quarters, in the smoke of aloe-wood
- the women burn, all the massed clouds are swallowed up!
What the poem says
The ocean was dug out by the sons of King Cakaraṉ (Sagara), and its roar is stilled by the soft, low music of the city's vīṇās, which are shaped like the makara, a mythical sea creature.
On the towering mansions the women burn so much fragrant aloe-wood that the clouds vanish into its smoke. The verse speaks of the gentleness of the music and the abundance of the incense.