கம்பராமாயணம் 4912 · சுந்தர 3.30

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பளிக்கு மாளிகைத் தலந்தொறும் - பளிங்கால் அமைக்கப்பெற்ற மாளிகைகளின் உப்பரிகை தோறும்; இடந்தொறும் பசுந்தேன் துளிக்கும் - எல்லா இடங்களிலும் தேனைத் துளிக்கின்ற; தண்நறும் - குளிர்ந்த நறுமணம் வீசும்; கற்பகச் சோலைகள் தோறும் - கற்பக மரங்கள் நிரம்பிய சோலைகள் தோறும்; அளிக்கும் - பணியாட்கள் வழங்கும்; தேறல் உண்டு - கள்ளைப் பருகி; ஆடுநர் பாடுநர் ஆகி - (மயக்கத்தால்) ஆடுபவர்களாகவும் பாடுபவர்களாகவும் இயல்பு திரிந்து; களிக்கின்றார் அலால் - செருக்குக் கொள்பவரைத் தவிர; கவல்கின்றார் ஒருவரை - கவலைப்படுகின்ற ஒரு மனிதரை; காணேன் - (யான்) காணவில்லை.

கவல்கின்றார் என்பது பிராட்டியைக் குறிப்பதாக வலிந்து பொருள் கூறுவாரும் உளர். இடந்தொறும் ஆடுநர் பாடுநர் என்றும் கூறலாம். ஏற்பின் கொள்க. இங்கு அது கற்பகமரத்துக்கு அடைமொழியாகப் பேசப் பெற்றது. இடந்தொறும் தேன் துளிக்கும் கற்பகம் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On every terrace of the crystal mansions, and in every place, in every cool
  2. and fragrant grove of kalpaka trees that drip fresh honey,
  3. they drink the toddy that is poured for them and become dancers and singers,
  4. and they revel; but not one who grieves do I see!

What the poem says

Everywhere Aṉumaṉ looks, on the crystal terraces and in the honey-dripping groves of wish-granting trees, the demons drink, dance, sing and celebrate.

He sees no one in sorrow. The commentary mentions that some readers strain this to mean Aṉumaṉ has not yet found the one person in Ilaṅkai who is grieving, Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḷikku māḷikait talam toṟum, iṭam toṟum, pacuntēṉ
tuḷikkum kaṟpakat taṇ naṟuñ cōlaikaḷ tōṟum,
aḷikkum tēṟal uṇṭu, āṭunar pāṭunar ākik,
kaḷikkiṉṟār alāl, kavalkiṉṟār oruvaraik kāṇēṉ!