கம்பராமாயணம் 4914 · சுந்தர 3.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இளமுலை - (அரக்கியர்களின் இளமையான முலையின் கண்ணே; எறித்த குங்குமத்து - (சிவந்த) ஒளியை வீசுகின்ற குங்குமக் குழம்பால்; எழுதிய தொய்யில் - எழுதப் பெற்ற வரிக் கோலங்கள்; கறுத்த மேனியில் - (அரக்கர்களின்) கரிய மேனியில்; பொலிந்தன - விளக்கமாகத் தெரிந்தன; ஊடலில் - ஊடற்பிணக்கத்தாலே, கனன்று - சீற்றங் கொண்டு; மறித்த நோக்கியர் - மாறுபாடு பெற்ற விழிகளைப் பெற்ற அரக்கியர்களின்; மலரடி - (தாமரை மலர்போன்ற பாதத்தில்; மஞ்சுளப் பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பாலே; குறித்த கோலங்கள் - எழுதிய கோலங்கள்; அரக்கர் குஞ்சி - அரக்கர்களின் தலைமயிரின்கண்; பொலிந்தில - விளங்கித் தோன்றவில்லை. அரக்கர்களின் கரிய நிறமும் அவர்களின் தலைமயிரின் சிவந்த நிறமும் பேசப்பட்டது. தொய்யில் -மகளிரின் மார்பில் அணியப் பெறும் வரிக்கோலம். இது கொடிவடிவாகவும், கரும்பு வடிவாகவும் எழுதப்பெறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The leaf-patterns drawn in glowing saffron on young breasts
- shone out on the dark bodies of the demons! But the designs of women who, flaring in their sulks,
- turned their eyes away — the designs traced in lovely red lac on their flower-feet —
- did not show up on the demons' hair!
What the poem says
A playful picture of lovemaking and lovers' quarrels. The saffron patterns painted on the demon women's breasts rub off onto their lovers' dark bodies and stand out clearly there.
When the women sulk, the men bow their heads to their feet to win them back, so the red lac designs on the women's feet rub onto the men's hair. Because the demons' hair is red, those marks cannot be seen.