கம்பராமாயணம் 4937 · சுந்தர 3.55

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை
முரிந்து உயர் பால் கடல் முகந்து மூரிவான்
சொரிந்ததேயாம் எனத் துள்ளும் மீனொடும்
விரிந்தது தண்நிலா மேலும் கீழுமே!

பொருள் · Meaning in Tamil

மூரிவான் - பெரிய ஆகாயம்; தெரிந்து - உலகுக்கு நன்மை செய்ய எண்ணி; ஒளிர் - ஒளிவீசுகின்ற; திங்கள் வெண்குடத்தினால் - சந்திரனாகிய குடத்தினாலே; திரை முரிந்து உயர் - அலைகள் மடங்கி மடங்கி எழுகின்ற; பாற்கடல் முகந்து - பாற்கடலையே முகந்தெடுத்து; சொரிந்ததே என - கொட்டியது என்று கூறும்படி; வெண்நிலா - வெண்மையான நிலாவெளிச்சம்; மேலும் கீழும் - மலைப்புறத்திலும், ரன துள்ளும் - துள்ளுகின்ற; மீனொடும் விரிந்தது - நட்சத்திரங்களுடன் பரவிற்று.

ஆகாயம் உலகுக்கு நன்மை செய்ய எண்ணிப் பாற்கடலையே முகந்தெடுத்துப் பொழிந்தாற் போல நிலாவின் வெளிச்சம் எங்கும் பரவிற்று (கம்ப.549) மூரிவான்- எழுவாய்; சொரிந்தது - பயனிலை. ஆம், ஏ, அசைகள்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if, with the bright, clear white pitcher of the moon, the great sky,
  2. meaning good, had scooped up the Sea of Milk with its breaking, rising waves
  3. and poured it out — so, together with the leaping stars,
  4. the white moonlight spread everywhere, above and below!

What the poem says

The moonlight floods everything. It is as if the vast sky, wishing to do the world a kindness, had used the moon as a white pitcher to scoop up the cosmic Ocean of Milk and pour it out over the land.

The stars twinkle like drops leaping in the poured milk.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1terintu oḷir tiṅkaḷ veṇ kuṭattiṉāl tirai
murintu uyar pāṟ kaṭal mukantu mūrivāṉ
corintatē ām eṉat tuḷḷum mīṉoṭum
virintatu veṇnilā mēlum kīḻumē!