கம்பராமாயணம் 4938 · சுந்தர 3.56

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரும் தவன் சுரபியே அந்தி வான்மிசை
விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா
வருந்தல் இல் பசும் கதிர் வழங்கு தாரையாச்
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே!

பொருள் · Meaning in Tamil

அருந்தவன் - அரியதவம் புரிந்த வசிட்டனுக்குரிய, சுரபி - காமதேனு; ஆதி வான் மிசை - கிழக்கு வானத்திலே; விரிந்த - விரிவுபெற்ற; பேர்உதயமா - பெரிய உதய கிரியாகவும்; மடி - அப்பசுவின் மடி; வெண்திங்களா - வெண்மையான பூரண மதியமாகவும்; பசுங்கதிர் - அந்தமதியின் பசுமையான கதிர்கள்; வருந்தல் இல் - வருந்துதல் இல்லாமல் (உவப்புடன்; வழங்கு தாரையா - (அப்பசு) பொழிகின்ற பீர்களாகவும்; நிலவின் தோற்றம் - நிலாவெளிச்சத்தின் காட்சி; சொரிந்த பால் ஒத்தது - எவ்விடத்தும் கொட்டப்பட்ட பால் வெள்ளம் போன்றது.

வசிட்டனுக்கு உரிய காமதேனு உதயமலையாகவும், அப்பசுவின் மடி பூரணச் சந்திரனாகவும் சந்திரனின் கதிர்கள் பசு பொழிகின்ற பீர்களாகவும் அந்த நிலாவின் வெளிச்சம் எங்கும் சொரிந்த பாலாகவும் பேசப்பட்டன.

உதயகிரி - பசு. திங்கள் மடி - கதிர் - பீர் நிலவு - வெள்ளம் உதயம் - உதயகிரி. முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் (ஆரண் - அயோமுகி 30) ஆதிவான் - சூரியன் உதிக்கும் வானம். ஆதிவான் - அந்திவான் - ஒப்பிடுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great ascetic's cow Surabhi upon the eastern sky,
  2. as the vast rising-mountain spread out, her udder the white moon,
  3. the cool rays given without stint the streams she yields —
  4. the sight of the moonlight was like milk poured out!

What the poem says

A fuller version of the milk image. The wish-granting cow Surabhi (Kāmadhenu), which belonged to the sage Vasiṣṭha, is pictured as the great eastern mountain behind which the moon rises.

The full moon is her udder, its rays are the jets of milk she gives freely, and the moonlight spread over everything is the milk itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruntavaṉ curapiyē āti vāṉmicai
virinta pēr utayamā maṭi veṇ tiṅkaḷā
varuntal il pacuṅ katir vaḻaṅku tāraiyāc
corinta pāl ottatu nilaviṉ tōṟṟamē!