கம்பராமாயணம் 4939 · சுந்தர 3.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மீன் எலாம் - நட்சத்திரங்கள் யாவும்; எண்ணுடை - யாவராலும் மதிக்கப் பெறும்; அனுமன்மேல் - அனுமனின் திருமேனிமேல்; இழிந்த பூ மழை - (தேவர்களால்) (தூவப்பெற்று) இறங்கிய பூமாரி; அண்ணல் - பெருமைமிக்க; வாள் அரக்கனை அஞ்சி - கொடிய இராவணனுக்குப் பயந்து; மண்ணிடை வீழ்கில - பூமியில் விழாதனவாயும்; மறித்தும் போகில - திரும்பி மேலே செல்லாதனவாயும்; ஆய்கதிர் - அசைகின்ற ஒளியைப் பெற்றுள்ள; விண்ணிடை - ஆகாயத்தில்; தொத்தின போன்ற - தொத்திக் கொண்டிருப்பன போன்றுள்ளன.
ஆய்கதிர் -அசைகின்ற கதிர். தருக்கோவை (125) வாள் அரக்கன் - வாளை ஏந்திய அரக்கன் என்றும் கூறலாம். மீன்களை அமரர் தூவிய மலராகப் பேசும் பெரிய திருவந்தாதி (61). சேவடி மேல் மண்ணளந்த அந்நாள்--வானாடர்--பூத்தெளித்தால்-- விசும்பின்-- மீன், என்று பேசும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The shower of flowers let fall upon the honoured Aṉumaṉ
- neither falls to the earth nor goes back up again;
- fearing the mighty demon of the sword, with trembling rays
- they seem to cling to the sky — so are all the stars!
What the poem says
The gods, delighted at Aṉumaṉ's arrival, have showered flowers on him. The stars look like those flowers caught halfway.
They dare not land on the ground in Irāvaṇaṉ's kingdom for fear of him, and they will not go back, so they hang trembling in the sky. The commentary cites an earlier hymn that also calls the stars flowers strewn by the gods.