கம்பராமாயணம் 4941 · சுந்தர 3.59

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீசு உறு பசும் கதிர்க் கற்றை வெண் நிலா
ஆசு உற எங்கணும் நுழைந்து அளாயது
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றால்!

பொருள் · Meaning in Tamil

வீசுறும் - திசைகள்தோறும் பரப்புகின்ற; பசும் - பசுமையான; கதிர்க்கற்றை - கிரணத் தொகுதிகளையுடைய; வெண்நிலா - வெண்மையான சந்திரன்; ஆசு உற - வேகமாக; எங்கணும் - எல்லா இடங்களிலும்; நுழைந்து அளாயது - புகுந்து கலந்திருப்பது; காசு உறு - மணிகள் பதித்த; கடிமதில் - விளக்கமான மதில்களால் காவல் - காக்கப் பெறுகின்ற; இலங்கை ஊர் - இலங்கை நகருக்கு; தூசு - வெண்மையான மெல்லிய ஆடையால் (அமைந்த); உறையிட்டது போன்று தோன்றிற்று - போர்வை இட்டாற்போலக் காட்சி தந்தது.

வெண்ணிலா எங்கணும் புகுந்து கலந்திருப்பது வெள்ளைப் போர்வையை இலங்கைக்குப் போர்த்தினாற் போன்றிருந்தது.

பசும் -குளிர்ந்த, பசுநிலா விரிந்த பல்கதிர் மதி (அகம்.57) தூசு- வெள்ளாடை. ஏ. அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The white moonlight, with its cool sheaves of rays flung out,
  2. swiftly entering and mingling everywhere,
  3. looked as though Ilaṅkai, the guarded city of strong walls set with gems,
  4. had been wrapped in a covering of fine white cloth!

What the poem says

The moonlight gets into every corner of the city so quickly and completely that Ilaṅkai, with its jewelled walls, looks as though it has been wrapped in a sheet of fine white muslin.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīcuṟu pacuṅ katirk kaṟṟai veṇ nilā
ācuṟa eṅkaṇum nuḻaintu aḷāyatu
kācu uṟu kaṭi matil ilaṅkaik kāval ūrt
tūcu uṟaiyiṭṭatu pōṉṟu tōṉṟiṟṟē!