கம்பராமாயணம் 4942 · சுந்தர 3.60

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர்
பகழியின் செலவு என அநுமன் பற்றினால்
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை ஆங்கு அவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே!

பொருள் · Meaning in Tamil

(வெண்நிலா)

அனுமன் பற்றினால் - அனுமனின் தொடர்பால்; இகழ்வு அரும் - பழிக்கப்படுதல் இல்லாத; பெருங்குணத்து - சிறந்த பண்புகளைப் பெற்ற; இராமன் எய்தது - இராமபிரானால் ஏவப் பெற்ற; ஓர் பகழியின் செலவு என - ஒப்பற்ற அம்பின் பயணம் போல; அன்னவன் புகழ் - அந்த இராமபிரானின் புகழானது; அகழ் புகுந்து - அகழி கடந்து புகுந்தும்; இலங்கை புகுந்து -இலங்கை மாநகருக்குள் புகுந்தும்; உலாயது - பரவியதாகிய; ஓர் - ஒப்பற்ற; பொலிவு போன்றது - விளக்கம் போன்றிருந்தது.

(வெண்நிலவு அனுமன் தொடர்பால் இராமபிரான் புகழ் அகழ் முதலான இடங்களில் அவன் ஏவும் அம்புபோல் பரவியது.

மேற்பாட்டில் கூறப்பெற்ற வெண்நிலவின் ஒளி இப்பாட்டிலும் பேசப்படுகிறது. பொலிவும் - இதில் உள்ள உம் - அசை. பகழியின் செலவை அனுமனுக்கு ஏற்றிக் கூறுவாரும் உளர் ஏற்பின் கொள்க. 'செலவு என' என்னும் தொடரை ஆய்க. ஏ. அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the flight of an arrow loosed by Irāmaṉ of great virtue beyond reproach,
  2. through its link with Aṉumaṉ, it seemed —
  3. entering the moat, entering the ramparts, entering Ilaṅkai — as if that hero's
  4. fame had entered and were roaming there in all its splendour!

What the poem says

The white moonlight enters Ilaṅkai in the company of Aṉumaṉ, and it seems to be Irāmaṉ's glory, which is white in poetic convention, getting into the enemy city.

Like an arrow shot by Irāmaṉ, it passes the moat, crosses the ramparts and spreads through the streets. This foreshadows the arrows that will one day follow. Some readers apply the arrow image to Aṉumaṉ himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ikaḻvu arum perum kuṇattu irāmaṉ eytatu ōr
pakaḻiyiṉ celavu eṉa aṉumaṉ paṟṟiṉāl
akaḻ pukuntu araṇ pukuntu ilaṅkai aṉṉavaṉ
pukaḻ pukuntu ulāyatu ōr polivum pōṉṟatē!