கம்பராமாயணம் 4943 · சுந்தர 3.61

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனுமன் - அனுமன்; அவ்வழி - அந்தச் சமயத்தில்; அணுகல் ஆம் வகை - இலங்கையில் நுழையும் முறை; எவ்வழி என்பதை - எந்தமுறை என்பதை; உணர்வின் எண்ணினான் - அறிவினால் ஆராய்ந்து (பிறகு); செவ்வழி - (இலங்கைக்கு அமைந்த) நேரான வழியில் செல்லாமல்; ஒதுங்கினன்- விலகினவனாய்; தேவர் ஏத்த - தேவர்கள் கொண்டாட; போய் - வேறுவழியாகச் சென்று; வெவ்வழி - கொடிய வழியில் செல்லும்; அரக்கர் ஊர் - அரக்கருடைய இலங்கையை; மேவல் மேயினான் - அடைய முற்பட்டான்.

இலங்கையில் எம்முறைப்படி செல்வது என்பதை ஆராய்ந்த அனுமன் (அரக்கர்கள் அமைத்த) செவ்வழியில் போகாமல் வேறு வழியாகச் சென்றான். வால்மீகம், அனுமன் வழியில்லா இடத்தில் பிரவேசித்தான் என்று கூறும் (சுந்த 4 சர்க்கம் 1)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then Aṉumaṉ too considered with his understanding
  2. by which way he might best approach;
  3. he turned aside from the straight road and, praised by the gods, went on
  4. and set out to reach the city of the demons of cruel ways.

What the poem says

Aṉumaṉ now plans how to get into Ilaṅkai. After thinking it over carefully, he decides not to use the regular road and gates the demons have built.

Cheered by the gods, he makes for the city by another way. The commentary notes that in Vālmīki too he enters where there is no path.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avvaḻi aṉumaṉum aṇukalām vakai
evvaḻi eṉpatai uṇarviṉ eṇṇiṉāṉ
cevvaḻi otuṅkiṉaṉ tēvar ēttap pōy
vevvaḻi arakkar ūr mēval mēyiṉāṉ.