கம்பராமாயணம் 4944 · சுந்தர 3.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன்)
ஆழி அகழ் ஆக - கடலையே அகழாகக் கொண்டு; அருகா - அழியாத; அமரர் வாழும் - தேவர்கள் வாழ்கின்ற; ஏழ் உலகின் - ஏழு உலகங்களுக்கும்; மேலை வெளிகாறும் - மேலே உள்ள வெட்ட வெளி வரையிலும்; முகடு ஏறி - உச்சியானது உயர்ந்து சென்று; கேழ் - ஒளியுடைய; அரிய பொன் கொடு - சிறந்த பொன்னைக் கொண்டு; சமைத்த - அமைக்கப் பெற்ற; கிளர் வெள்ளத்து - சீறுகின்ற வெள்ளப் பெருக்கால்; ஊழி - யுகமானது; திரிநாளும் - மாற்றம் அடைகின்ற காலத்திலும், உலையா மதிலை - வேறுபாடடையாத மதிலை; உற்றான் - அடைந்தான்.
ஏழ் உலகின் -இன் - அசை மருள் நோக்கு என்பதைத் தேவர் மருளின் நோக்கு என்றார். நச்சர். இன் அசை என்றார். (சிந்தா - 2290) மா- காய் - காய் - மா என்னும் சீர்களைப் பெற்று வரும் (மணிமலர் 76).
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the ocean as its moat, above the undying gods' abodes,
- the seven worlds, up to the open space beyond, its summit climbing,
- built of rare and gleaming gold, by the surging floods
- of the turning of the aeon never shaken — that wall he reached.
What the poem says
Aṉumaṉ arrives at the city wall, which has the whole ocean for its moat. It rises past the seven worlds of the gods into the empty space beyond, and it is built of gleaming gold.
Even the great floods at the end of an age cannot move it. A new metre begins here.