கம்பராமாயணம் 4945 · சுந்தர 3.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கலங்கல் இல் - நிலையிலிருந்து பிறழாத; கடுங்கதிர்கள்- வெப்பமான சூரியர்கள்; அலங்கல் அயில் - வெற்றிமாலையணிந்த வேலேந்திய; வஞ்சகனை - வஞ்சகனாகிய இராவணனுக்கு; அஞ்சி - பயப்பட்டு; மீது- இலங்கை நகருக்கு மேலே; கடிது ஏகா எனின் - வேகமாகப் போகாது என்று கூறப்பெறின் (அது); அன்று உண்மையன்று; இங்கு - இங்கே தெரிகின்ற; இலங்கை மதில்தனை - இலங்கையின் மதிலை; ஏறல் அரிது - கடந்துபோவது கடினம்; என்று - என்று மனத்திலே நினைந்து; விரைந்து - வேகமாக; விலங்கி அகல்கின்றன - ஒதுங்கி அப்பாற் போகின்றன; என வியந்தான் - என்று (அனுமன்) அதிசயமுற்றான்.
கதிர்கள் பன்னிரண்டு என்பது புராண வழக்கு. இதுபற்றிக் கதிர்கள் என்றான். கடுங்கதிர் என்றதனால் சூரியர்கள் பேசப்படுகின்றார்கள். ஊர்தேடு படலம் 2/ ஆம் பாடல் இந்தக் கருத்தையே பேற்று. அங்கு சூரியனே குறிக்கப் பெறுகிறான். கதிர்கள், சூரியனின் கிரணங்கள் என்று பொருள் செய்தாரும் உளர். மதிள் இஞ்சிதனை ஏறல் - என்னும் பாடம் இருந்ததுபோலும் பாகார் இஞ்சிப் பொன்மதில் (கம்ப. 49/6.) என்னும் பகுதியை நினைக்கவும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That the fierce suns that never waver do not pass swiftly overhead
- for fear of the deceiver with the garlanded spear — that is not the truth;
- rather, thinking, "This wall of Ilaṅkai here is hard to climb,"
- they turn aside and hurry away!' — so he marvelled.
What the poem says
Standing at the foot of the golden wall, Aṉumaṉ returns to an idea he had earlier: that the suns avoid passing over Ilaṅkai. People say it is fear of the treacherous Irāvaṇaṉ.
Now that he has seen the wall, Aṉumaṉ thinks the real reason is simpler: it is too high for them to get over. Tradition speaks of twelve suns, hence the plural, though some take "suns" here to mean sunbeams.