கம்பராமாயணம் 4946 · சுந்தர 3.64

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தெவ் அளவு இலாத இடை சேறல் அரிது அம்மா!
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடையாக;
எவ்வளவின் உண்டு வெளி ஈறும் அது! 'என்னா
வெவ் வள அரக்கனை மனம் கொள வியந்தான்.

பொருள் · Meaning in Tamil

தெவ் - இராவணன் கவர்ந்த பொருள்கள்; அளவு இலாத - அளவற்றுள்ளன; இறை தேறல் - (அதுபற்றி) சிறிய அளவு தெளிதலும், அரிது - மிகக் கடினம்; அரண் - (அப்பொருள் குவித்துள்ள) கோட்டையானது; வெளி - ஆகாயம்; அண்டம் இடை ஆக - அண்டங்கள் தங்குவதற்கு இடமாக; எவ் அளவின் உண்டு - எந்த அளவுக்கு இருக்கிறதோ; அவ்அளவு - அந்த அளவுக்கு; அகன்றது - பரந்திருக்கிறது; ஈறும் - கோட்டையின் உயர்வும்; அது - அந்த ஆகாயம் போன்றது; என்னா - என்று கருத; வெவ்வள அரக்கனை - கொடுஞ்செல்வம் பெற்ற இராவணனை; மனக்கொள - மனம் கொள்ளும்படி; வியந்தான் - அதிசயித்தான்.

இடை - இடம். தெவ்வுதல் - கொள்ளையடித்தல் அது - அதுபோன்றதே. (திருக்குறள் நுண்மாலை) மணங்கொள என்பது மணக்கொள என வந்தது வழி எதுகை நயங்கருதினான் போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'His plunder is beyond measure; even a little of it is hard to grasp, ah!
  2. His fortress spreads as wide as the space that holds the cosmos;
  3. however far the open sky extends, so far its reach!' Thinking this,
  4. he marvelled in his heart at the demon of cruel wealth.

What the poem says

Aṉumaṉ considers the riches Irāvaṇaṉ has taken by force from every world. They are so vast that the mind cannot take in even part of them.

The fortress that holds them seems as broad and as high as space itself, which contains the whole universe. He marvels at the demon king's ill-gotten wealth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tev aḷavu ilāta iṟai tēṟal aritu ammā!
avvaḷavu akaṉṟatu araṇ aṇṭam iṭaiyāka;
ev aḷaviṉ uṇṭu veḷi īṟum atu! 'eṉṉā
vev vaḷa arakkaṉai maṉak koḷa viyantāṉ.