கம்பராமாயணம் 4947 · சுந்தர 3.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மடங்கலும் - ஊழித்தீயும்; அரியேறும் - ஆண்சிங்கமும்; மதம் - மதங்கொண்ட; மால்களிறும் - பெரிய யானையும்; நாண - வெட்கமடையும்படி; தனியே - தனியாக; நனிமூதூர் - பழமையான இலங்கைக்குள்; நடந்து புகுதும் நம்பி - நடந்து புகும் அனுமன்; அடங்கு அரிய - பிறருக்கு அடங்காத; தானை - சேனையையும்; அயில் - சூலாயுதத்தையும் (பெற்ற); அந்தகனது - யமனுடைய; ஆணை- கட்டளைகள் நிறைவேற்றப்படும், திசையின் - தெற்குத் திசையின்; கடும் வாய் அனைய - கொடுமை மிக்க வாய்போன்ற; வாயில் - (இலங்கையின் கோபுரவாயிலை; எதிர்கண்டான்- கண் எதிரில் பார்த்தான். மடங்கல் -ஊழித்தீ. “கொழுந்துவிட்டு அழன்று எரி மடங்கல்” (கம்ப. 7727). மடங்கலும் என்பது மடங்கல் என வந்தது உம்மைத் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Putting to shame the doomsday fire, the lion and the great rutting elephant,
- the hero who was entering the ancient city alone and on foot
- saw — like that of Death, with his spear and his host none can subdue, whose command
- rules the dread southern quarter, like its very mouth — the gateway before him.
What the poem says
Aṉumaṉ walks alone toward Ilaṅkai, bolder than a lion or a rutting elephant, fierce as the fire at the end of the world.
Before him he sees the city's great gate. It is like the gaping mouth of the south, the direction ruled by Death, with his trident and his irresistible armies.