கம்பராமாயணம் 4949 · சுந்தர 3.67

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்
ஊழின்முறை அன்றி உடனே புகும்! இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை! 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஏழ் உலகில் - ஏழு உலகத்திலும்; வாழும் - வாழ்கின்ற; உயிர்யாவையும் - எல்லா உயிர்களும்; எதிர்ந்தால் - ஒன்று கூடினாலும்; ஊழின் முறை இன்றி - ஒருவர்பின் ஒருவர் புகும் முறையில்லாமல்; உடனே புகும் - ஒருசேர உள்ளே நுழையும்; இது ஒன்றோ - இப்படிப்பட்ட வாயில் இஃது ஒன்று தானா (பல); வாழியர் - இலங்கையில் உள்ளவர்கள்; இயங்குவழி - நடமாடுவதற்கு அமைக்கப்பெற்ற வழி; ஈது என - இப்படிப்பட்ட தென்று கருதும்படி; வகுத்தால் - அமைக்கப் பெற்றிருந்ததென்றால்; பகை - (இலங்கைக்குள் உள்ள) நம்முடைய பகை; உள -- நீர் நிரம்பிய; ஆழி ஏழின் அளவு அன்று - ஏழு கடல்களின் அளவன்று (அவற்றினும் பெரிது); என்றான் - என்று சிந்தித்தான்

இவ்வாயிலில் உலக உயிர்கள் ஒன்று கூடினாலும் ஒருசேர உள்ளே நுழையலாம். இப்படிப்பட்ட வாயில் இது ஒன்று தானா ? பல. இவர்கள் இயங்குவதற்கு அமைந்த வழி இது என்றால், பகை ஏழு கடலினும் மிகுதியாகும்.

எதிர்ந்தால் -ஒன்று கூடினால் (சந்தித்தால்) மக்களை நேருவார் - எதிர்ந்தார்கள் (கம்ப. 1938). யாவையும் - ஐ - அசை (உருபன்று) புகழான் விளக்கினான் என்பதை (சிந-2605) புகழானை விளக்கினான் - என்று தேவர் அமைத்தார். ஓ - சாரியை என்றார் இனியர் - (இநீ-2605)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If all the living beings of the seven worlds came together,
  2. they could pass in at once, without waiting their turn! And is this the only one?
  3. If this is the way laid out for the dwellers here to come and go,
  4. then the enemy is not of the measure of the seven seas!' he said.

What the poem says

The gateway is so wide that every creature in all seven worlds could enter at once, without queuing. Aṉumaṉ realises that it is only one of many.

If gates this size are just the everyday entrances for the city's people, the enemy he and Irāmaṉ face must be greater in number than the seven oceans.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēḻ ulakiṉ vāḻum uyir yāvaiyum etirntāl
ūḻiṉmuṟai iṉṟi uṭaṉē pukum! itu oṉṟō?
vāḻiyar iyaṅku vaḻi ītu eṉa vakuttāl
āḻi uḷa ēḻiṉ aḷavu aṉṟu pakai! 'eṉṟāṉ.