கம்பராமாயணம் 4951 · சுந்தர 3.69

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி
கோல கணை நேமி குலிசம் சுரிகை குந்தம்
பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார்.

பொருள் · Meaning in Tamil

வலத்தினர் - ஆற்றல்மிக்க அரக்கர்கள்; சூலம் மழு வாளொடு - சூலம், மழு, வாள்; அயில் தோமரம் உலக்கை - வேல், ஈட்டி, உலக்கை; கால வரிவில் பகழி - யமனைப் போன்ற வில் அம்பு; கப்பணம் முசுண்டி - இரும்புநெரிஞ்சி, முசுண்டி; கோல் கணையம் நேமி - தடி, வளைதடி, சக்கரம்; குலிசம், சுரிகை, குந்தம் - வச்சிரம், உடைவாள், கைவேல், பாலம் - பிண்டிபாலம்; முதல் ஆயுதம் - முதலான ஆயுதங்களை; பரித்தார் - தாங்கி நின்றார்கள்.

ஆற்றல்மிக்க அரக்கர்கள் சூலம் முதலான ஆயுதங்களை ஏந்தி நின்றனர் சூலம் - முத்தலைவேல். மழு - கோடாலி. இப்பாடலில் உள்ள ஒடுவை மூன்றனுருபாகக் கொண்டதால் எல்லாவற்றிலும் உம்மையை விரித்து உரைகூறினர் உம்மை விரித்தால் முதல் என்பது வேண்டா. அடியார்க்கு நல்லார் கொடித்தார் வேந்தரொடு எனும் தொடரில் உள்ள (சிலம்பு 5-182) ஒடுவை அசையாக்கினும் அமையும் என்றார் ஈண்டும் அது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Tridents, axes and swords, spears, lances, pestles,
  2. deadly banded bows and arrows, caltrops, muśuṇṭi clubs,
  3. staves, throwing-sticks, discuses, thunderbolts, daggers, javelins,
  4. piṇṭipālam and other weapons the mighty ones bore.

What the poem says

A catalogue of the weapons carried by the demon gate-guards, among them tridents, axes, swords, lances, pestles, bows and arrows, iron caltrops, clubs, discuses, thunderbolts, daggers and javelins.

Several are special weapons of epic warfare, such as the muśuṇṭi and the piṇṭipālam. The commentary discusses the grammar of the list.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūlam maḻu vāḷoṭu ayil tōmaram ulakkai
kāla vari vil pakaḻi kappaṇam mucuṇṭi
kōl kaṇaiyam nēmi kulicam curikai kuntam
pālam mutal āyutam valattiṉar parittār.